[X] Close
 

கேரளாவின் மழை முகங்கள் 3: வெள்ளத்தில் தொலைத்த உறவுக்காக காத்திருக்கும் மூதாட்டி!


old-lady-await-missing-relatives-at-kalamassery

  • பாரதி ஆனந்த்
  • Posted: 21 Aug, 2018 16:06 pm
  • அ+ அ-

கேரள மழை வெள்ளத்தில் தொலைத்த தனது உறவுகளைத் தேடிக்கொண்டிருக்கிறார் நிவாரண முகாமில் நிற்கதியாக நிற்கும் ஒரு மூதாட்டி.

மழை வெள்ளத்துக்கு உடைமைகளை இழந்து வாடுபவர்கள் ஏராளம் உறவுகளை இழந்து தவிப்பவர்களும் ஏராளம். ஆனால், தொலைத்த உறவை எங்கு தேடுவது என்றுகூட தெரியாமல் உயிர் ஒன்று வாடிக்கொண்டிருக்கிறது.

கலமசேரியில் உள்ள கேரள அரசு மருத்துவக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாமில் ஏராளமானோர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அங்குதான் இருக்கிறார் பார்வதி. கட்டம்போட்ட சட்டை அணிந்திருக்கும் அவர் தன்னைக்கடந்து போகிற வருகிறவர்களிடம் எல்லாம் என்னை என் குடும்பத்தாருடன் சேர்த்துவிடுங்கள் எனக் கெஞ்சுவது பார்ப்பவர்களை சோகமடையச் செய்துள்ளது.

அவருக்கு செவித்திறன் குறைவு. நினைவும் தப்பிவிட்டது. அதனால், அவரை அவரது உறவினர்களுடன் சேர்ப்பதில் சிக்கல் நிலவுகிறது. பரவூர் அரசு மருத்துவமனையில் தனது மகளுக்காக காத்திருந்தபோது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு மூதாட்டி பார்வதி நிவாரண முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார்.

பரவூர் மற்றும்தான் அவரது நினைவில் இருக்கிறது. இதனால், பரவூரைச் சேர்ந்த பெண் போலீஸ் ஒருவர் மூதாட்டியின் உறவினரை அந்தப் பகுதியில் தேடிக் கண்டுபிடிப்பதாக உறுதி அளித்திருக்கிறார்.
மூதாட்டி பார்வதிக்கு அவரது குடும்பம்தான் உண்மையான நிவாரணமாக இருக்க முடியும். 

[X] Close