[X] Close
 

மாணவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் கேரள கல்வித்துறை


education-dept-to-help-flood-hit-students

  • பாரதி ஆனந்த்
  • Posted: 21 Aug, 2018 14:42 pm
  • அ+ அ-

மழை வெள்ளத்தால் கேரள மாநிலம் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பள்ளி சீருடைகள், புத்தகங்கள், சான்றிதழ்களை இழந்த பள்ளி மாணவர்களுக்கு உதவ மாநில பள்ளிக்கல்வித் துறை முன்வந்துள்ளது.

இது தொடர்பாக கேரள கல்வித்துறை கூறியிருப்பதாவது:

ஆகஸ்ட் 31-ம் தேதிக்கு முன்னதாக மாணவர்கள் தாங்கள் இழந்த சான்றிதழ்கள் அல்லது சீருடை, புத்தகங்கள் போன்ற விவரங்களை தத்தம் பள்ளிகளில் தெரிவிக்க வேண்டும். பள்ளிகள் அந்தத் தகவல்களை பொதுக் கல்வித் துறை அதிகாரிகளிடம் தெரிவிக்கும். அவர்கள் செப்டம்பர் 3-ம் தேதி மாலை 5 மணிக்குள் உதவி தேவைப்படும் மாணவர்கள் பட்டியலை இறுதி செய்யும்.

பின்னர் டிபிஐ அலுவலகத்தில் சிறப்பு மையங்கள் அமைக்கப்பட்டு அங்கு சான்றிதழ்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஓனம் பண்டிகைக்குப் பின்னர் பள்ளி திறப்பதற்கு முன்னதாகவே மாவட்ட நிர்வாகம் பள்ளிக் கட்டிடங்களை தயார் நிலையில் இருக்கிறதா? உறுதியுடன் இருக்கிறதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல் மதிய உணவுத் திட்டம் பள்ளிக்கூடம் திறக்கும் நாளிலேயே செயல்படுத்தப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close