[X] Close

கேரளாவின் மழை முகங்கள் 2: நிவாரண நிதிக்காக தங்க வளையலைத் தந்த மணப்பெண்


newlyweds-gift-gold-for-flood-relief

  • பாரதி ஆனந்த்
  • Posted: 21 Aug, 2018 11:10 am
  • அ+ அ-

வெள்ள நிவாரணப் பணிகளுக்காக தனது 2.5 சவரன் தங்க வளையலைத் தந்திருக்கிறார் புதுமணப் பெண் ஒருவர். கேரள தேசத்தின் சோகத்தின் ஊடே சிலரது உதவிகள் நெகிழச் செய்கின்றன. அவர்கள் மழை முகங்களாக உயர்ந்து நிற்கின்றனர். அப்படியான மழைமுகம்தான் அஸ்வதி.

ஒரு பேரிடரோ பெருந்துயரோ நடந்த பிறகு அதிலிருந்து மீள்வதற்கு அசாத்திய தன்னம்பிக்கையும் அடிப்படையாக சில உதவிகளும் தேவைப்படத்தான் செய்கின்றன. அப்படிப்பட்ட அடிப்படை உதவிகளைத்தான் கேரளாவில் லட்சோப லட்ச மக்கள் எதிர்நோக்கியிருக்கின்றனர்.

எல்லா உதவியையும் அரசாங்கமே செய்துவிட முடியாது. அரசாங்கத்துக்கு தாராள மனம் கொண்டவர்கள் செல்வாக்கு மிகுந்தவர்கள் உதவ வேண்டும். 

அப்படித்தான் உதவியிருக்கிறார் அஸ்வதி. உடுமா பகுதியைச் சேர்ந்த அஸ்வதி - பிரசாத் ஜோடிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்கு இவர்கள் நண்பர்கள் உறவினர்களை மட்டும் அழைக்கவில்லை. பேக்கல் ஃபோர்ட் லயன்ஸ் கிளப் உறுப்பினர்களையும் அழைத்திருந்தனர்.

விழாவுக்கு வந்த லயன்ஸ் கிளப் உறுப்பினர்களிடம் தனது 2.5 சவரன் தங்க வளையலைத் தந்திருக்கிறார் அஸ்வதி. அஸ்வதியின் முடிவுக்கு மணமகன் பிரசாத், இருவீட்டார் உறுதுணையாக இருந்துள்ளனர்.

இது குறித்து லயன்ஸ் கிளப் தலைவர் சுகுமாரன் பூச்சக்காடு கூறும்போது, அஸ்வதி கொடுத்த வளையலை விற்று வெள்ள நிவாரணப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close