[X] Close

அழிவின் விளிம்பில் இந்தியாவின் முதல் கம்யூனிட்டி ரேடியோ!


crowdfunding-plea-to-save-dalit-women-s-radio

  • பாரதி ஆனந்த்
  • Posted: 21 Aug, 2018 10:24 am
  • அ+ அ-

ஒரு சமுதாய ரேடியோவின் வலிமையை அண்மையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வேலைக்காரன் படத்தில் மிக நேர்த்தியாகக் காட்டியிருப்பார்கள்.

கொலைகாரன் பேட்டை என்ற தான் வசிக்கும் பகுதியின் அடையாளத்தை மாற்ற சிவகார்த்திகேயன் மேற்கொள்ளும் முயற்சிக்கு அந்த சமுதாய ரேடியோ மிகவும் உதவியாக இருக்கும். 

இந்தியா போன்ற ஜனத்தொகை மிகுந்த நாட்டில் வானொலியின் பங்கு இன்றளவும் அளப்பரியது. அந்த வரிசையில் சமுதாய ரேடியோ என்பது நிச்சயமாக மகத்தான வீச்சு கொண்டது. அப்படிப்பட சமுதாய ரேடியோ ஒன்று தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது.

ஆம், இந்தியாவின் முதல் சமுதாய ரேடியோ என்ற பெருமையைப் பெற்ற சங்கம் ரேடியோதான் தற்போது நிதி நெருக்கடியால் அழிவின் விளிம்பில் இருக்கிறது.

ரேடியோவை தொடர்ந்து நடத்த முடியாததால் கிரவுட் ஃபண்டிங் மூலம் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானாவின் சங்காரெட்டி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான் சங்கம் ரேடியோ. இந்த ரேடியோவை 5000-க்கும் மேற்பட்ட ஏழை மக்கள் பெரும்பாலும் தலித் பெண்கள் இணைந்து நடத்தி வருகின்றனர்.

1998-ல் மச்சனூர் கிராமத்தில் இந்த ரேடியோ தொடங்கப்பட்டது. 2008-ல் சமுதாய வானொலியை நடத்துவதற்கான லைசன்ஸ் முறைப்படி கிட்டியது. 10 ஆண்டுகளாக ரேடியோ சேவை இயங்கி வருகிறது.
இப்போது இந்த சமுதாய ரேடியோவை நடத்த நிதியில்லை. மேலும் தொழில்நுட்ப சிக்கல்களும் உள்ளன.

இது குறித்து  https://milaap.org/fundraisers/dds-sangham-radio என்ற இணைய பக்கத்தில் "20 ஆண்டுகளுக்கு முன்னதாக சங்கம் ரேடியோ லைசன்ஸ் பெற்றபோது சங்கம் ரேடியோ விளிம்பு நிலையில் இருக்கும் கிராமப்புற விவசாயப் பணிபுரியும் பெண்களுக்கு ஒரு பொதுவெளியாகக் கிடைத்தது. இப்போது அது முடங்கும் நிலையில் இருக்கிறது. உங்கள் உதவி தேவை" எனக் கோரப்பட்டுள்ளது.

சங்கம் ரேடியோவுக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக அரசாங்கம் விளம்பரங்களுக்கான தொகையைத் தரவில்லை. நிலுவைத் தொகை ரூ.3.25 லட்சத்தை எட்டியிருக்கிறது.

தொழில்நுட்ப குறைபாடுகளை சமாளிக்க புதிய ட்ரான்ஸ்மிட்டர்கள் வாங்க வேண்டிய நிலையிலும் சங்கம் ரேடியோ இருக்கிறது.

புதிய ட்ரான்ஸ்மிட்டர்கள் ஒவ்வொன்றும் வாங்க ரூ.3 லட்சம் தேவை எனக் கூறுகிறார் சங்கம் ரேடியோவை நடத்திவரும் பெண்களில் ஒருவரான நரசம்மா. 30 கி.மீ. வரை ஒலிபரப்பப்பட்ட சங்கம் ரேடியோ தற்போது வெறும் 3 கி.மீ தூரம் வரையிலேயே ஒலிபரப்பப்படுகிறது என்ற வேதனையையும் அவர் பதிவு செய்துள்ளார்.

ஒடுக்கப்பட்ட பெண்களின் குரலாக இருந்த இந்த சமுதாய ரேடியோ முடங்கினால் அது சமூகத்தின் மீதான பரிகாசமாகவே அமையும்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close