[X] Close

அவரது அகால மரணம் ஆழமான வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது: ராகுல் உருக்கம்


his-untimely-death-left-a-deep-void-in-my-life

  • பாரதி ஆனந்த்
  • Posted: 20 Aug, 2018 16:53 pm
  • அ+ அ-

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்த நாளை ஒட்டி அவரது மகனும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு உருக்கமான ட்வீட்டை பதிவு செய்திருக்கிறார்.

அவர் அந்த ட்வீட்டில், "ராஜீவ் காந்தி கனிவான, மிருதுவான, மிகவும் பிரியமான நபராக இருந்தார். அவரது அகால மரணம் என் வாழ்வில் ஆழமான வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது. அவருடன் நான் செலவழித்த காலங்களை இப்போது நினைவு கூர்கிறேன். அவர் உயிருடன் இருந்தபோது நிறைய பிறந்தநாட்களை அவருடன் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறேன்" என ட்வீட் செய்திருக்கிறார். 

அவரது இந்த ட்வீட் காங்கிரஸ் ஆதரவாளர்கள் பலரையும் நெகிழச் செய்திருக்கிறது.

முன்னதாக இன்று காலை, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, ராகுலின் சகோதரி பிரியங்கா காந்தி ஆகியோர் ராஜீவ் காந்தியின் நினைவிடமான வீர் பூமிக்குச் சென்று அஞ்சலி செலுத்தினர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

1944 ஆகஸ்ட் 20-ம் தேதி பிறந்த ராஜீவ் காந்தி 1984 முதல் 1989 வரை இந்தியாவின் 7-வது பிரதமராக இருந்தார். 1984-ல் இந்திரா காந்தி படுகொலைக்குப் பின்னர் ராஜீவ் நாட்டின் பிரதமராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்தியாவின் மிக இளைய பிரதமர் அவரே ஆவார். பிரதமராகும் போது அவருக்கு வயது 40.

1991-ல் தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பொதுக் கூட்டத்தின்போது ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டால் படுகொலை செய்யப்பட்டார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close