[X] Close

அடுத்தது கோவா!- எச்சரிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர் மாதவ் காட்கில்


next-floods-in-goa-says-madhav-gadkil

பிரபல சுற்றுச்சூழல் அறிவியலாளர் மாதவ் காட்கில் | கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 20 Aug, 2018 15:29 pm
  • அ+ அ-

சுற்றுச்சூழலை பாதுகாக்கத் தவறினால் கேரளாவில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புபோல் அடுத்ததாக கோவா மாநிலத்திலும் பாதிப்பு ஏற்படும் என எச்சரித்திருக்கிறார் பிரபல சுற்றுச்சூழல் அறிவியலாளர் மாதவ் காட்கில். மேற்குத் தொடர்ச்சி மலைகள் தொடர்பான ஆய்வை மேற்கொண்ட குழுவுக்கு தலைமை வகித்தவர் மாதவ் காட்கில்.

தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில், "மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கையை சிதைக்கும் அத்தனை வேலைகளும் நடந்து வருகின்றன. கோவாவில் மேற்கு தொடர்ச்சி மலை அதிகளவில் இல்லை என்றாலும்கூட அங்கேயும் நடந்துவரும் இயற்கை விரோத சூழல் இயற்கை சீற்றங்களுக்கு வழிவகுக்கும்.

கோவாவில் நடைபெற்றுவரும் சட்டவிரோத குவாரிகளால் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சட்டவிரோத குவாரிகள் குறித்து அமைக்கப்பட்ட விசாரணை குழு ரூ.35000 கோடி அளவுக்கு குவாரிகள் மூலம் பரிவர்த்தனை நடக்கிறது எனக் கணித்துள்ளது.

கல்குவாரிகளால் கிடைக்கும் லாபத்துக்கு ஆசைப்பட்டு சில தனிநபர்கள் சுரண்டலில் ஈடுபடுகின்றனர். குவாரிகள் தொடர்பாக கெடுபிடிகளைக் கடைபிடிக்க அரசும் தவறிவிட்டது. இரும்புத்தாது சுரங்கங்களும் சட்டவிரோதமாக கோவாவில் நிறைய இயங்குகின்றன. இவற்றாலும் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவைப் போல் கோவாவில் மழை பெய்தால் மிக மோசமான பாதிப்புகள் ஏற்படக்கூடும்" எனக் கூறியுள்ளார்.

சுரங்கங்களால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து அவர் மேற்கொண்ட ஆய்வில், கோவாவில் உள்ள சுரங்கங்களால் நீர்நிலைகள் மிக மோசமாக பாதிக்கப்படும் என 2011-லேயே எச்சரித்திருக்கிறார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close