[X] Close

ரயில்களின் லைவ் அப்டேட்டுக்கு அதிகாரப்பூர்வமாக புதிய செயலி


railways-app

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 20 Aug, 2018 13:09 pm
  • அ+ அ-

பயணிகள் அனைத்து ரயில்களில் நிகழ் நேர நிலையையும் தெரிந்து கொள்ள புதிய செயலி அறிமுகமாகவுள்ளது. 

புறநகர் ரயில் சேவை மற்றும் நீண்ட தூர ரயில் சேவைகள் பற்றிய தகவல்களைத் தெரிந்து கொள்ள தற்போது அதிகாரப்பூர்வமற்ற முறையில் பல செயலிகள் உள்ளன. இவற்றுக்கு சரியான மாற்றாக, தெற்கு ரயில்வே அதிகாரப்பூர்வமாக ஒரு செயலியை உருவாக்கிவருகிறது. 

இன்னும் பெயரிடப்படாத இந்த செயலி தற்போது ஆண்ட்ராய்ட் தளங்களில் பரிசோதிக்கப்பட்டு வருவதாகவும், தென்னக ரயில்வேயின் ரயில் சம்பந்தமான அனைத்து விதமான தகவல்களையும் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்றும் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

சமீபத்திய ரயில் அட்டவணை, நாளுக்கு நாள் ரயில் பாதையில் நடக்கும் வேலைகள் பற்றிய தகவல்கள், ரயில் தாமதம் பற்றிய தகவல் என அனைத்தும் இந்த செயலியில் இருக்கும். ஆகஸ்ட் மாத இறுதியில் கூகுள் ப்ளே ஸ்டோரில் இது கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும், ஒரு ரயில் பெட்டியை மொத்தமாக முன்பதிவு செய்தல், குறிப்பிட்ட விழாக்களுக்கு சிறப்பு ரயில் சேவையைக் கோருதல் என கூடுதல் சேவைகளும் இந்த செயலியில் இருக்கும். ரயில்வே பாதுகாப்பு படை, அரசு இரயில்வே போலீஸ், கேட்டரிங் சேவை என முக்கிய தொடர்பு எண்களும் இந்த செயலியில் இருக்கும்.

தெற்கு ரயில்வேயின் எண்ணற்ற துறைகளுக்கு இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லாமல், நிகழ் நேர தகவல்கள் சரியாகப் பதிவிடமுடியாது என்பதால், அந்த ஒருங்கிணைப்பை உறுதிபடுத்த வேண்டும் என்பதே பயணிகள் சிலரின் கோரிக்கையாக உள்ளது. 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close