[X] Close

குழந்தையுடன் தாயை மீட்ட விமானப்படை; 'தேங்க்ஸ்’... எழுதிவைத்து நன்றி!


kerala-flood-thanks

  • வி.ராம்ஜி
  • Posted: 20 Aug, 2018 12:03 pm
  • அ+ அ-

கேரள வெள்ளத்தில் சிக்கிக்கொண்டு பரிதவித்த தாயையும் குழந்தையையும் விமானப்படையினர் பத்திரமாக மீட்டனர். அவர்களுக்கு அந்தக் குடும்பத்தினர் வீட்டு மாடியில் ‘தேங்க்ஸ்’ (ThankS) என்று எழுதி, நன்றியைத் தெரிவித்தனர்.

கடவுளின் தேசம் என்று அழைக்கப்படும் கேரள மாநிலம், இயற்கை வளங்கள் சூழ்ந்த மாநிலம். மலையும் மரங்களும் கொண்ட அழகு மாநிலம் இது. ஆனால் சமீபத்திய பருவ மழையின் தீவிரத்தால், மழைவெள்ளத்துக்கு மொத்த கேரள மாநிலமுமே பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

குடியிருப்புப் பகுதிகளையெல்லாம் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதில் லட்சக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு பத்திரமான இடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். ஆங்காங்கே முகாம்கள் அமைத்து அதில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்கும் பணிகளில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். இதில் விமானப்படையினரும் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனிடையே, கேரள மாநிலம் கொச்சியில் வீட்டு மாடி ஒன்றில் தாயும் அவரின் குழந்தையும் செய்வதறியாது, தவித்துக்கொண்டிருந்தனர். இதைக் கண்ட விமானப்படை வீரர் விஜய் வர்மா உடனடியாக அந்தப் பெண்ணையும் அவரின் குழந்தையையும் மீட்டெடுத்தார். பிறகுதான் அந்தப் பெண்ணுக்கு போன உயிரே திரும்பிவந்தது.

இதில் நெகிழ்ந்து கலங்கிய அந்தக் குடும்பத்தார், விமானப்படை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, மாடியில்’ThankS' என்று ஆங்கிலத்தில் பெயிண்ட் மூலம் எழுதி, நன்றியைத் தெரிவித்துக்கொண்டார்கள்.

பிறகு, அந்தக் குடும்பத்தாரும் பத்திரமாக மீட்கப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர்.

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close