[X] Close
 

நிலச்சரிவில் இருந்து தப்பிய நடிகர் ஜெயராம்: குடும்பத்துடன் நிவாரண முகாமுக்கு உதவச் சென்றார்


jayamram-escaped-from-kerala-floods-now-in-relief-camp-to-help

வீடியோவில் ஜெயராம் குடும்பத்தினர் பேசிய போது...

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 20 Aug, 2018 11:10 am
  • அ+ அ-

நிலச்சரிவில் இருந்து குடும்பத்துடன் தப்பிய நடிகர் ஜெயராம் அடுத்த நாளே தனது குடும்பத்துடன் கொச்சி நிவாரண முகாமுக்கு உதவிக்காகச் சென்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இது குறித்து அவரே லைவ் வீடியோவில் தோன்றி விளக்கியுள்ளார். 

மலையாள நடிகர் ஜெயராம் தனது குடும்பத்துடன் பாலக்காடுக்கு சென்றிருக்கிறார். அப்போது, நிலச்சரிவில் சிக்கிக் கொண்டார். அவர்கள் சென்ற கார் நிலச்சரிவில் சிக்கி முன்னும் பின்னும் நகர முடியாமல் நின்றுபோனது. பின்னர் போலீஸார் உதவியுடன் மீண்ட அவர்கள் அன்றைய தினம் காவலர் குவார்டர்ஸிலேயே இரவைக் கழித்தனர்.

பின்னர் மறுநாள் காலை ஜெயராம் தனது குடும்பத்தினருடன் கொச்சியில் உள்ள நிவாரண முகாமுக்குச் சென்று அங்கு நிவாரணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். கேரளாவில் பருவமழை தொடங்கிய ஜூன் 1-ம் தேதி முதல் நேற்று வரை (ஆகஸ்ட் 19) சரா சரியாக 2346.5 மி.மீ. மழை பெய்துள்ளதாக ஐஎம்டி தெரிவித்துள்ளது.

இது வழக்கமான அளவை (1649.5 மி.மீ.) விட 42 சதவீதம் அதிகம். மாவட்டவாரியாக பார்க்கும்போது அதிகபட்சமாக இடுக்கி மாவட்டத்தில் 92 சதவீதமும், பாலக்காடு மாவட்டத்தில் 72 சதவீதமும் கூடுதல் மழை பெய்துள்ளது.
 



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close