[X] Close

கேரள வெள்ளப் பாதிப்பு: வீட்டின் மாடியில் ஹெலிகாப்டர் இறக்கிக் காப்பாற்றப்பட்ட மூதாட்டி - சமூகவலைத்தளத்தில் குவியும் பாராட்டு


amazing-incident-at-kerala-flood-relief

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 19 Aug, 2018 12:27 pm
  • அ+ அ-

கேரள வெள்ளத்தில் சிக்கிக்கொண்ட மக்களைக் காப்பாற்றுவதில் நேற்று ஒரு கடற்படை மீட்புக்குழு திறமையுடன் செயல்பட்டுள்ளது. 

கேரளாவில் வெள்ளம் பாதித்த சாலாகுடி பகுதியில் ஹெலிகாப்டரை வீட்டுக்கூரைமீது நிறுத்தி வீட்டில் சிக்கியிருந்த 80 வயது மூதாட்டியைக் காப்பாற்றியிருக்கிறார் கடற்படை மீட்புக்குழு வீரர்.

சாலாகுடி நகரத்தின் தெற்கே 6 கிலோமீட்டர் தூரத்திற்கு அருகே உணவு மற்றும் நிவாரணப் பொருட்களை விநியோகிப்பதற்காக 8 பேரைக் கொண்டு இரண்டு ஜெமினி படகுகளையும் செலுத்தத் திட்டமிட்டது. 

வெள்ளத்தின் மேலே பறந்த இந்தியக் கடற்படையின் ஹெலிகாப்டர் 42 பி இரண்டு அடுக்கு மாடி கட்டிடத்தில் சில வயதானவர்கள் இருப்பதைக் கண்டனர். 

20-லிருந்து 25 பேரை அங்கிருந்து வெளியே கொண்டுவந்து பின்னர் ஹெலிகாப்டரில் ஏற்றினர். ஆனால் ஒரு மூதாட்டி மட்டும் மேலே ஏறி வரமுடியாமல் வீட்டுக்குள் தவித்துக் கொண்டிருப்பதைக் கண்டனர்.  

அவர் இருக்கும் இடத்திற்கு தாழ்வாக ஹெலிகாப்டரை ஒரு வீட்டு கூரைமீது நிறுத்தினர். அங்கிருந்து ஒரு கூடையை கீழே இறக்கி அதன்மூலம் மூதாட்டி மேலே கொண்டுவந்து ஹெலிகாப்டரில் ஏற்றி அவரையும் மீட்டுள்ளனர்.

 

 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close