[X] Close
 

25 நாய்களையும் மீட்டால் தான் வருவேன்: கேரளாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம்


25-dogs-rescued-in-kerala-floods

சுனிதா நாய்களுடன் மீட்கப்பட்ட போது | படம்: ட்விட்டர் பக்கத்திலிருந்து...

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 18 Aug, 2018 19:41 pm
  • அ+ அ-

கேரளாவின் திருச்சூர் பகுதியில், வெள்ளம் சூழந்த பகுதியிலுள்ள வீட்டில் பெண்மணி ஒருவர் சிக்கியிருந்தார். அவரை மீட்புக் குழு மீட்க முயற்சித்தாலும், தன்னுடன் இருக்கும் 25 நாய்களையும் மீட்டால் தான், தானும் வருவேன் என அவர் உறுதியாக இருந்ததால், கடைசியில் நாய்களுடன் அவரும் மீட்கப்பட்டார்.

வீட்டை சூழ்ந்த தண்ணீரின் அளவு உயர்ந்து வந்த நிலையில், சுனிதா என்ற பெண்மணி தன் வீட்டிலிருக்கும் நாய்களையும் மீட்டால் தான் தானும் வெளியே வருவேன் என்று மீட்புக் குழுவிடம் தெரிவித்தார். தேசியப் பேரிடர் நிவாரணப் படையைச் சேர்ந்தவர்கள் அந்தப் பெண்மணியையும், நாய்களையும் மீட்டனர். அந்தப் புகைப்படங்களை ட்விட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளனர். 

மீட்புப் படை சுனிதாவின் வீட்டை நெருங்கிய போது, வீடு மொத்தமும் வெள்ளக்காடாகியிருந்தது. நாய்கள் படுக்கையின் மேல் நின்றிருந்தன. தற்போது சுனிதா, அவரது கணவர், மீட்கப்பட்ட நாய்கள் என அனைவரும் விசேஷ முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு என தனியான முகாம்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close