[X] Close

அவர்கள் அன்பினால் கொடுத்ததை அவர்களுக்கே திருப்பிக் கொடுக்கும் ஹனான்


kerala-girl-hanan-pays-rs-1-5-lakhs-for-flood-relief

  • பாரதி ஆனந்த்
  • Posted: 18 Aug, 2018 10:59 am
  • அ+ அ-

ஹனான் ஹமீது. இந்தப் பெயர் ஒரு மாதத்துக்கு முன்னர் கேரளாவில் ஹைலைட் டாபிக்காக இருந்தது. கல்லூரி சீருடையில் மீன் விற்ற ஹனானின் புகைப்படம் இணையத்தில் வைரலானதையடுத்து அவர் கலவையான விமர்சனத்துக்கு உள்ளானார்.

சிலர் அவரைப் பாராட்டினர். சிலர், இது வெறும் பப்ளிசிட்டி என ட்ரோல் செய்தனர். இதனால், ஹனான் மனமுடைந்தார். அவரது கல்லூரி முதல்வர் ஹனான் குறித்து ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் ஹனான் பேசியிருந்தார். ஹனான் பற்றிய செய்தியறிந்த கேரள முதல்வர் பினராயி விஜயன், ஹனானுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார்.

அதன்பின்னர் ஹனானுக்கு கேரள மக்கள் பலரும் உதவிக்கரம் நீட்டினர். இந்நிலையில், ஹனான் ஹமீது தற்போது தனக்கு உதவிய மக்களுக்கு நன்றிக்கடன் செலுத்தியிருக்கிறார். ஆம், தனக்கு பலரும் தந்தருளிய ரூ.1.5 லட்சம் பணத்தை திருப்பிக்கொடுக்க முன்வந்திருக்கிறார்.

தன்னைப் பற்றிய செய்தி வைரலான இரண்டே நாட்களில் தனது வங்கிக் கணக்கில் பலரும் பணம் செலுத்தியதாகவும் அவ்வாறு சேர்ந்த பணம் ரூ.1.5 லட்சத்தை முதலமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு அளிக்கப்போவதாகவும் ஹனான் கூறியுள்ளார்.

தனது மொபைலில் இணையம் வேலை செய்யாததால் தன்னால் உடனே பணத்தை ட்ரான்ஸ்பர் செய்ய முடியவில்லை என்றும் இணையத்திலாவது அல்லது முதல்வரை நேரில் சந்தித்தாவது ரூ.1.5 லட்சத்தை விரைவில் நிவாரண நிதிக்கு அளிக்க இருப்பதாகக் கூறியுள்ளார்.

"எனக்காக உதவிய மக்கள் இன்று பேரிழப்பைச் சந்தித்துள்ளனர். அவர்கள் பணத்தை அவர்களுக்கே திரும்பத்தர விரும்புகிறேன்" என்று ஹனான் கூறியுள்ளார்.

அவர்கள் அன்பினால் கொடுத்ததை அவர்களுக்கே திருப்பிக் கொடுக்கும் ஹனானை எப்படிப் பாராட்டாமல் இருக்க முடியும்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close