[X] Close

முதலில் ஆவேசம் பின்னர் நன்றிகள் ஆயிரம்: மீட்புத் தருணங்களை நினைவுகூரும் ராணுவ வீரர்


anger-turns-to-appreciation-a-soldier-recounts-rescue-operation-in-ernakulam

  • பாரதி ஆனந்த்
  • Posted: 17 Aug, 2018 16:37 pm
  • அ+ அ-

கேரள மழை வெள்ளத்தில் சிக்கிய 500-க்கும் மேற்பட்டவர்களை மீட்ட குழுவில் இருந்த கேப்டன் ரிஷவ் ஜம்வால் தனக்கு நேர்ந்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். சுதந்திர தினத்தன்று அந்த சம்பவம் நடந்துள்ளது.

இது குறித்து களத்திலிருந்து தி இந்துவுக்கு தொலைபேசி வாயிலாகப் பேசிய ஜம்வால் கூறியதாவது.
எர்ணாகுளம் மாவட்டம் ஏலூர் பகுதியில் குடியிருப்புகளுக்குள் வெள்ளம் சூழ்ந்துவிட்டதாக தகவல் வந்ததையடுத்து அன்று சென்றோம். செவ்வாய்க்கிழமை இரவு நாங்கள் அங்கு சென்றபோதும் மழை பெய்து கொண்டிருந்தது.

முதல் தளம் வரை வெள்ளம் பாய்ந்து கொண்டிருந்தது. மின்சாரம் இல்லை. எங்களைப் பார்த்தவுடன் பல பக்கத்திலிருந்தும் உதவிக்குரல் கேட்டது. எங்களிடம் இரண்டு படகுகள் மட்டுமே இருந்தன. எல்லோரையும் காப்பாற்றுவோம் என்று நாங்கள் சொன்னபோது அடுத்து என்ன நடக்கும் எனத் தெரியாமல் பீதியில் இருந்த அனைவருக்கும் ஆத்திரம் வந்தது. அவர்களது நிலைமை எங்களுக்குப் புரிந்தது. ஆனால், நாங்கள் மீட்புப் பணியில் பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் முதல் உரிமை கொடுத்தோம்.

வெள்ளிக்கிழமை காலைக்குள் அந்தப் பகுதியில் இருந்து 500 பேரை மீட்டோம். 

ஆரம்பத்தில் ஆவேசப்பட்ட மக்கள் ராணுவ வீரர்கள் எல்லோரையும் காப்பாற்றியபோது மனமுவந்து நன்றி தெரிவித்தனர். மரியாதை செலுத்தினர். என்னைப் போன்ற ராணுவ வீரருக்கு இதுதான் உண்மையான சுதந்திர தின பரிசு.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close