[X] Close

கேரள மழை பலி 164 ஆக அதிகரிப்பு: முதல்வர் அறிவிப்பு


death-toll-climbs-to-164-pm-modi-to-visit-flood-hit-state-today

  • பாரதி ஆனந்த்
  • Posted: 17 Aug, 2018 14:13 pm
  • அ+ அ-

கேரள மாநிலத்தில் மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 168 ஆக அதிகரித்துள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் கடந்த 8-ம் தேதி முதல் மிக பலத்த மழை பெய்து வருகிறது. வரலாறு காணாத இந்த மழை காரணமாக, இசுக்கி, கோழிக்கோடு, காஸர்கோடு உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான வெள்ளம் ஏற்படுள்ளது. இந்நிலையில், மழை, வெள்ளத்துக்கு இதுவரை பலியானோர் எண்ணிக்கை 164 என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்திருக்கிறார். வியாழக்கிழமை மட்டும் 30 பேர் பலியாகினர்.

இதற்கிடையில், மழை வெள்ள நிலவரத்தைப் பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை கேரளா வருகிறார். வான்வழியாக அவர் ஆய்வு மேற்கொள்கிறார்.

அடுத்த 48 மணி நேரத்துக்கு கேரளாவில் மழை குறைய வாய்ப்பிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கோழிக்கோடு மாவட்டத்தில் இயல்பு நிலை மெதுவாக திரும்பி வருகிறது.

திரிச்சூர், ஆலுவா, முவட்டுபுழா பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய மக்களை வான்வழியாக மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close