[X] Close
 

அன்று உயிரைக் கொடுத்தார் நர்ஸ் லினி; இன்று உதவிக்கரம் நீட்டினார் கணவர் சஜீஷ்


in-crisis-a-heart-warming-gesture-from-lini-s-widower

  • பாரதி ஆனந்த்
  • Posted: 17 Aug, 2018 10:18 am
  • அ+ அ-

கேரள நர்ஸ் லினியை நாம் அதற்குள் மறந்திருக்க வாய்ப்பில்லை. ஆம், நிபா வைரஸ் காய்ச்சல் தாக்கியவருக்கு சிகிச்சை அளித்ததால் ஏற்பட்ட தொற்றில் தானும் உயிர் துறந்தார் லினி.

நிபா கொடிய வைரஸ் கண்டறியப்படுவதற்கு முன்னதாக போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இன்றி மருத்துவ சேவை செய்ததால் அவரது உயிர் பிரிந்தது. கடைசியாக அவர் பணிக்கு கிளம்பிய நாளில்கூட அவருக்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது. அப்போது தனது உறவினர்களிடம், "மருத்துவமனையில் நிறைய நோயாளிகள் குவிந்துள்ளனர். இந்த நேரத்தில் விடுப்பு எடுப்பது சரியாக இருக்காது" எனக் கூறிச் சென்றவர் லினி.

லினியின் உயிர்த்தியாகம் அவரது கணவருக்கு அரசு வேலையைப் பெற்றுத் தந்தது. கேரள அரசு லினியின் கணவர் சஜீஷுக்கு கிளார்க் வேலை வழங்கியது. கிளார்க் வேலையில் பெற்ற முதல் மாத சம்பளம் ரூ.25,200-ஐ கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அனுப்பியிருக்கிறார் சஜீஷ்.

இது குறித்து சஜீஷ், "எங்கள் குடும்பம் மீளாத் துயரில் சிக்கியபோது கேரள மக்களும் கேரள அரசும் எங்கள் பக்கம் நின்றது. உணர்வுரீதியாக கேரள அரசுக்கும் மக்களுக்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அந்த மிகப்பெரிய கடனுக்கு எனது சிறிய அடையாள நன்றியே இது.

எனது மனைவி நோயாளிகளுக்காக உயிர்த்தியாகம் செய்தார். அவரை நினைத்து நான் பெருமிதம் கொள்கிறேன். என் மனைவியின் தியாகத்துக்குக் கிடைத்த பரிசுதான் எனக்கான அரசாங்க வேலை" என்றார்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close