[X] Close
 

விறுவிறு அப்டேட்களை வழங்கும் கேரள முதல்வரின் ட்விட்டர் பக்கம்


kerala-cm-twitter-page-updates

  • பாரதி ஆனந்த்
  • Posted: 16 Aug, 2018 15:11 pm
  • அ+ அ-

தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடைந்துள்ளதால் கேரளாவின் பல மாநிலங்கள் மீண்டும் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றன.

வரலாறு காணாத வெள்ளத்தில் சிக்கியிருக்கும் கேரளாவில் இதுவரை மழைக்கு 67 பேர் பலியானதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 15-ம் தேதி நேற்று மட்டும் 24 பேர் பலியாகினர். இன்றும் பல்வேறு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்டோர் பலியானதாக இன்னும் உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலக்காட்டு மாவட்டத்தில் நிலச்சரிவில் சிக்கி 8 பேர் பலியான சம்பவம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், முதல்வர் பினராயி விஜயன் அலுவலகத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அவ்வப்போது மீட்பு நடவடிக்கைகள், மழை எச்சரிக்கைகள் குறித்த ட்வீட்கள் வெளியாகி வருகின்றன.
கடந்த இரண்டு மணி நேரத்தில் வெளியான முக்கியமான ட்வீட்கள்:

எச்சரிக்கை ட்வீட்:

பெரியார் மற்றும் சாலக்குடி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து வருகிறது. சாலக்குடியிலிருந்து 1 கி.மீ சுற்றளவில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். அதேபோல் ஆலுவா பகுதிக்கு அரை கி.மீ சுற்றளவில் வசிப்பவர்களும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

உதவிக்கரம் நீட்டும் ட்வீட்:

வெள்ளத்தில் சிக்கியவர்கள் தொடர்பு கொள்ள:
பொறுப்பு அதிகாரி ஷிபு: 7907150768,
பினு: 9747491010
டிபிஐ: 9447625106
கிராம அலுவலர்: 8547610107
பிடிஏ தலைவர்: 9446323919, 8075322301
சாலா ஆண்கள் பள்ளி: 9497012817

மீட்பை விவரிக்கும் ட்வீட்:
பத்தனம்திட்டா, திருவனந்தபுரம் பகுதிகளில் இருந்து மீட்கப்பட்டவர்கள் திருவனந்தபுரம் சாலா பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இப்படி அரசின் ஒவ்வொரு நடவடிக்கையும் ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இதனால், சமூக வலைதளங்களில் போலி தகவல்கள் பரவினாலும் அதிலிருந்து மக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள பெரும் உதவியாக இருப்பதாக கேரள மக்கள் தெரிவித்துள்ளனர்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close