[X] Close

கேரள மழை: போதுமான படகுகள் இல்லாமல் மீட்பு நடவடிக்கைகள் பாதிப்பு


seeking-help-on-social-media

இடுக்கி தேக்கத்திலிருந்து வெளியேறும் தண்ணீர் | கோப்புப் படம்

  • கார்த்திக் கிருஷ்ணா
  • Posted: 16 Aug, 2018 13:10 pm
  • அ+ அ-

தத்தளிக்கும் மக்களிடமிருந்து உதவிக்கான வேண்டுதல்களால் நிரம்பியுள்ளது சமூக ஊடகங்கள். மேலும் தண்ணீரால் அடித்துச் செல்லப்படும் வீடுகள், சாலைகள், கரையோரங்கள் என வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றன. 

ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்பு படை, கேரள மாநில காவல்துறை மற்றும் வருவாய்த்துறை, கேரளாவின் பல்வேறு இடங்களில் சிக்கிக்கொண்டுள்ள மக்களைச் சென்றடைய அரும்பாடுபட்டுவருகின்றனர். தேவையான படகுகள் இல்லாமல் போனதும் மீட்பு நடவடிக்கைக்கு இடையூறாகியுள்ளது. 

ராணி தொட்டமான் பகுதியைச் சேர்ந்த இளைஞரான ஜெஃப்பி ஜேக்கப், தனது வீட்டில் இருக்கும் இரண்டு முதியவர்களை யாராவது உடனடியாக மீட்க வேண்டும் என்று தனது பேஸ்புக் பக்கத்தில் கோரியுள்ளார். இரண்டு பேரில் ஒருவர் ஜெஃப்பியின் 90 வயது தாத்தா.

அந்த வீடியோவில், தனது வீட்டின் முதல் மாடி வரை தண்ணீர் வந்துள்ளதையும், அந்தப் பகுதியில் பல வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதையும் ஜெஃப்பி காட்டியுள்ளார். தீயணைப்புத் துறை உடனடியாக இரண்டு படகுகளை அந்தப் பகுதிக்கு அனுப்பியுள்ளது. 

தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையை உதவிக்காக தான் அணுகினாலும், தண்ணீரில் மூழ்கியுள்ள பகுதிகளைச் சென்றடையத் தேவையான படகுகள் தங்களிடம் இல்லை என அவர்கள் தெரிவித்ததாக ஜேக்கப் கூறியுள்ளார்.ம் 
இடுக்கி, வயநாடு, மலப்புரம் பகுதிகளிலும் இந்த நிலையே தொடர்கிறது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close