[X] Close
 

கேரளாவில் மீட்புப் பணிகளில் கைகோத்த 'ஜீப்' இளைஞர்கள்


in-flood-hit-thiruvananthapuram-jeepers-come-to-aid

  • பாரதி ஆனந்த்
  • Posted: 16 Aug, 2018 11:43 am
  • அ+ அ-

வரலாறு காணாத மழை கேரளாவைப் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறது. வெள்ளம் சூழ்ந்த வீடுகள் நிலச்சரிவுகள் என ஆங்காங்கே மக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.

தேசிய பேரிடர் மேலாண்மை குழுவினரும் மாநில தீயணைப்புத் துறை காவல்துறை இன்னும் பிற துறையினரும் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், மீட்புப் பணிகளில் 'ஜீப்பர்ஸ்' என்று தங்களை அழைத்துக் கொள்ளும் 8 இளைஞர்கள் கொண்ட குழுவும் இணைந்துள்ளது. இதில் சிறப்பு என்னவென்றால் இவர்கள் அனைவரும் ஜீப் வாகனம் வைத்துள்ளனர். தங்களது ஜீப் வாகனங்களை வெள்ளத்தில் சிக்கியிருக்கும் மக்களை மீட்டு அழைத்துச் செல்வதற்கு அவர்கள்
பயன்படுத்துகின்றனர்.

இந்தக் குழுவைச் சேர்ந்த ரமேஷ் பிள்ளை, திருவனந்தபுரம் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தாங்கள் செயல்படுவதாகக் கூறினார். தற்போது சங்குமுகம் பகுதியில் தங்கள் குழுவுக்குச் சொந்தமான 6 ஜீப்கள் பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

குழுவின் மற்றொரு உறுப்பினர் ஆப்ரஹாம் ஜோசுவா சுமனம் கூறும்போது, "நீரில் மூழ்கிய வாகங்களை டோ (tow) செய்து கொண்டு செல்ல தங்கள் உதவியைப் பலரும் நாடுகின்றனர்" என்றார்.

பெரிய டயர்கள் கொண்ட வாகனம் என்பதால் தங்களது ஜீப்பில் வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு எளிதாக சென்றுவர முடிவதாக அவர் கூறினார். கேரளாவில் ஒக்கி புயல் பாதிப்பு ஏற்பட்டபோதும் இந்த ஜீப்பர்கள் மக்கள் சேவையில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனர். வெள்ள நீர் முற்றிலுமாக வடிந்து இயல்பு நிலை திரும்பும் வரை தங்கள் சேவை தொடரும் என இவர்கள் கூறுகின்றனர்.

தொடர்பு எண்: ஆப்ரஹான்:  +919745420055, அனுசங்கர்: +919846419222, ரமேஷ் பிள்ளை- +919895570810, கிச்சு- +919895303486

[X] Close