[X] Close

வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: எய்ம்ஸ் அறிக்கை


atal-bihari-vajpayees-condition-continues-to-be-critical

  • பாரதி ஆனந்த்
  • Posted: 16 Aug, 2018 11:29 am
  • அ+ அ-

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக எய்ம்ஸ் மருத்துவமனை சற்றுமுன் (காலை 11.05) மணியளவில் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த அறிக்கையில், "வாஜ்பாயின் உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அவரது நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. செயற்கை சுவாசக் கருவிகள் உதவியுடன் அவர் சுவாசித்து வருகிறார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, பாஜக தலைவர் அமித் ஷா உள்ளிட்டோர் இன்று காலை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்று வாஜ்பாய் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர். 

வாஜ்பாயிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்ட்:

வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ள நிலையில் ட்விட்டரில் இந்திய அளவில் #AtalBihariVaajpayee என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close