[X] Close

வீட்டை காலி செய்ய மறுக்கும் முன்னாள் நீதிபதி கர்ணன்


justice-karnan-refuses-to-vacate-flat

  • பாரதி ஆனந்த்
  • Posted: 16 Aug, 2018 10:41 am
  • அ+ அ-

நீதிபதி கர்ணன் தனது பணிக்காலத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானார். தற்போது பணி ஓய்வுக்குப் பின்னரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார்.

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது அவருக்கு ஒதுக்கப்பட்ட வீட்டை காலி செய்ய கர்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 8 பேருக்கு எதிராக தான் பிறப்பித்த உத்தரவு இன்னும் செயல்படுத்தப்படாத நிலையில் அந்த உத்தரவை பிறப்பிக்க தற்காலிக நீதிமன்றமாக தான் பயன்படுத்திய அந்த வீட்டை காலி செய்ய இயலாது என அவர் கூறியிருக்கிறார்.

இருப்பினும், அந்த வீட்டை எப்போதுமே காலி செய்ய இயலாது என தான் கூறவில்லை என்றும் வீட்டின் உரிமையாளர் முன்வந்தால் வீட்டை வாடகைக்கு எடுத்துக்கொள்ளவோ அல்லது வீட்டை கிரயம் செய்துகொள்ளவோ தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால், நீதிபதி கர்ணன் காரணம் காட்டும் உத்தரவு ஆகஸ்ட் 8 2017-ல் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 8 2017-லேயே உச்ச நீதிமன்றம் கர்ணன் எந்த ஒரு நீதிமன்ற மற்றும் நிர்வாக அலுவல்களை மேற்கொள்ள தடை விதித்திருக்கிறது. இந்நிலையில், நீதிபதி கர்ணன் தற்போது அவரது குடியிருப்பை காலி செய்ய மறுப்பது ஏற்புடையதல்ல என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கர்ணன் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். நீதிமன்ற அவமிதிப்புக்காக கைது செய்யப்பட்ட நீதிபதி கர்ணன் 6 மாத சிறைத் தண்டனைக்குப் பின்னர் கடந்த டிசம்பரில் விடுவிக்கப்பட்டார். ஜூன் 2017-ல் அவர் பணி ஓய்வு பெற்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close