[X] Close
 

தேசியக் கொடியை இறக்கிய பாஜக தலைவர் அமித் ஷா: வீடியோ வெளியிட்டு காங்கிரஸ் கிண்டல்


congress-criticizes-amitshah-regarding-independence-day-celebration

தேசியக் கொடியை இறக்கிய பாஜக தலைவர் அமித் ஷா - படம்: ஏஎன்ஐ

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 16 Aug, 2018 09:56 am
  • அ+ அ-

சுதந்திர தினத்தை முன்னிட்டு, பாஜக தலைவர் அமித் ஷா தேசியக் கொடியை ஏற்றுவதற்கு பதில் தவறுதலாக இறக்கியது குறித்து காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது.

டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது, கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

முன்னதாக, அமித் ஷா தேசியக் கொடியை ஏற்ற முயன்றபோது கிழே இறங்கியது. கயிறை தவறுதலாக இழுத்ததே இதற்குக் காரணம். உடனடியாக சுதாரித் துக்கொண்ட அவர், அவசர அவசர மாக கயிற்றைப் பிடித்து மேலே இழுத்து, தேசியக் கொடியை ஏற்றினார். இதனிடையே இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதை பல்வேறு தரப்பினரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த வீடியோவை காங்கிரஸ் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்து கிண்டல் செய்துள்ளது. அதில், “தேசியக் கொடியை சரியாக ஏற்றத் தெரியாதவர்கள் எவ்வாறு நாட்டை வழி நடத்துவார்கள். தேசியக் கொடியை இதுபோல் அவமதிப்பு செய்திருக்கக் கூடாது. தேசப்பற்றாளர்கள் என்று தாங்களே சான்றளித்துக் கொள்ளும் அவர்களுக்கு, தேசிய கீதத்தின் மரபு, மாண்புகூட தெரியவில்லை” எனக் கூறப்பட்டுள்ளது.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close