[X] Close
 

கேரளாவில் கடும் மழையிலும் தேசபக்தி


independence-day-celebrated-in-kerala-during-floods

திருவனந்தபுரத்தில் உள்ள கண்ணம்மூலா பகுதியில் கொட்டும் கனமழையிலும் தேசியக் கொடி ஏற்றிய இளைஞர்கள்

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 16 Aug, 2018 09:53 am
  • அ+ அ-

கொட்டி தீர்க்கும் கனமழையையும் பொருட்படுத்தாமல், கேரளாவில் தேசியக் கொடி ஏற்றப்பட்ட நிகழ்வு அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.

இந்தியாவின் 72-வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதேசமயத் தில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவில் மாவட்ட ஆட்சியரகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்களில் மட்டுமே தேசியக் கொடி ஏற்றப்பட்டது. வழக்கமாக, சுதந்திரத் தினத்தன்று குடியிருப்புப் பகுதிகளிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு சுதந்திர தினக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெறும். ஆனால், மழையின் காரணமாக மாநிலத்தில் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடைபெறவில்லை.

இந்நிலையில், கேரளத் தலைநகர் திருவனந்தரபுரத்தில் உள்ள கண்ணம்மூலா என்ற பகுதியில் இளைஞர்கள் சிலர் சேர்ந்து சுதந்திரத் தினத்தைக் கொண்டாடினர். அப்போது, மார்பளவு தேங்கி நிற்கும் தண்ணீரையும், கொட்டி வரும் கன மழையையும் பொருட் படுத்தாமல் அவர்கள் தேசியக் கொடியை ஏற்றினர். பின்னர், அங்கிருந்தவர்களுக்கு அவர்கள் இனிப்புகளை வழங்கினர்.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close