[X] Close
 

கேரளாவில் நிவாரண பணிகளுக்கு வந்த அரிசி மூட்டைகளை சுமந்து சென்ற ஐஏஎஸ் அதிகாரிகள்: சமூக வலைத்தளத்தில் குவியும் பாராட்டு


ias-officers-unload-the-goods-in-kerala-for-floods

அரிசி மூட்டையை தோளில் சுமந்து சென்ற ஐஏஎஸ் அதிகாரிகள்

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 16 Aug, 2018 09:50 am
  • அ+ அ-

மக்கள் சேவைக்காகவே தாங்கள் நியமிக்கப்பட்டுள்ளோம் என்பதை மறந்திருக்கும் அரசு ஊழியர்கள் மத்தியில், கேரளாவைச் சேர்ந்த இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் நிவாரணப் பணிகளுக்காக அரிசி மூட்டைகளைத் சுமந்து சென்ற சம்பவம் அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

கேரளாவில் கடந்த ஒரு வாரத் துக்கும் மேலாக மிக பலத்த மழை பெய்து வருவதால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளம் காரண மாக அங்கு உணவுப் பொருட் களுக்கும், தூய்மையான குடிநீருக் கும் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால், தமிழகம், கர்நாடகா உட்பட பல மாவட்டங் களில் இருந்து கேரளாவுக்கு உணவுப் பொருட்களும், குடிநீரும் விநியோகம் செய்யப்பட்டு வரு கின்றன. மாநில அரசுகள் மூலமாக வும், தன்னார்வலர்கள் மூலமாகவும் இந்த உணவுப் பொருட்கள் அங்கு இரவு - பகலாக கொண்டு செல்லப்படுகின்றன.

அந்த வகையில், வயநாடு ஆட்சியர் அலுவலகத்துக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்கள் அடங்கிய மூட்டை களுடன் நேற்று முன்தினம் இரவு மூன்று வேன்கள் வந்தன. ஆனால், மூட்டைகளை இறக்க அங்கு யாரும் இல்லாததால் அந்த வேன்கள் அங்கேயே நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில், வயநாட்டில் வெள்ள நிவாரண சிறப்பு ஐஏஎஸ் அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக் கும் எம்.ஜி.ராஜமாணிக்கமும், வயநாடு உதவி ஆட்சியரான என்.எஸ்.கே.உமேஷும் பல பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொண்டுவிட்டு இரவு 10 மணியளவில் அங்கு வந்தனர். அப்போது, உணவுப்பொருட்களை இறக்க வழியின்றி அங்கு வேன்கள் நின்று கொண்டிருந்ததைக் கண்ட இருவரும், சற்றும் யோசிக்காமல் அவற்றில் இருந்த அரிசி, பருப்பு மூட்டைகளை ஒவ்வொன்றாக இறக்கி அலுலகத்துக்கு சுமந்து சென்றனர்.

இதுதொடர்பான புகைப்படங் கள் சமூக வலைதளங்களில் நேற்று வேகமாக பரவின. மக்கள் சேவைக்காக, தங்களின் அதிகாரிப் பதவியையும் பாராமல், உணவுப்பொருள் மூட்டைகளைத் தூக்கிச் சென்ற ஐஏஎஸ் அதிகாரி களுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

இதேபோல், இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு நிவாரண முகாமுக்கு அம்மாவட்ட ஆட்சியர் ஜீவன் பாபு நேற்று சென்றார். அப்போது, அங்கு மதிய உணவு பரிமாறப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது, அங்கிருந்த ஒரு சிறுவன், வந்திருப்பது மாவட்ட ஆட்சியர் எனத் தெரியாமல், அவரிடம் உப்பை எடுத்து வருமாறு கூறினான். இதனைக் கேட்டு பலமாக சிரித்த ஆட்சியர் ஜீவன் பாபு, உடனடியாக சென்று உப்பை எடுத்து வந்து அந்த சிறுவனிடம் கொடுத்தார். மேலும், அந்த சிறுவனுக்கு அவர் தண்ணீரையும் கொண்டு வந்தார். இந்தக் காட்சியை பார்த்த அங்கிருந்த மக்கள், ஆட்சியரின் எளிமையை வெகுவாக பாராட்டினர்.

[X] Close