[X] Close
 

கேரளாவில் தொடரும் கனமழை: கொச்சி விமான நிலைய சேவை ரத்து - பலி எண்ணிக்கை 47-ஆக உயர்வு


heavy-rains-in-kerala-cochin-airport-closed

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 16 Aug, 2018 09:45 am
  • அ+ அ-

கேரளாவில் கனமழை தொடர் வதால் கொச்சி விமான நிலைய சேவை தற்காலிகமாக ரத்து செய் யப்பட்டுள்ளது. வருகிற சனிக் கிழமை வரை அந்த விமான நிலையம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த 8-ம் தேதி முதல் மிக பலத்த மழை பெய்து வருகிறது. வரலாறு காணாத இந்த மழை காரணமாக, இடுக்கி, கோழிக்கோடு, காஸர்கோடு உள் ளிட்ட மாவட்டங்களில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வெள் ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற பேரிடர்களில் சிக்கி இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 47-ஆக உயர்ந்துள்ளது.

மேலும், கனமழையால் கேரளா வில் வடக்கு எல்லையான காஸர் கோடு முதல் தெற்கு எல்லையான திருவனந்தபுரம் வரை பாயும் அனைத்து ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனைத் தொடர்ந்து, கேரளா முழுவதும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அந்த வகை யில், வெள்ளத்தால் மிகக் கடுமை யாக சேதமடைந்திருக்கும் கோழிக் கோடு மாவட்டத்தில் உள்ள கண்ணப்பன்குண்டு கிராமத்தைச் சேர்ந்த அனைவரும் நேற்று அங் கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இந்நிலையில், மழை காரண மாக மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளுக்கும் நீர்வரத்து அதி கரித்து வருகிறது. அதன்படி, இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம், அதன் முழுக்கொள்ள வான 142 அடியை நேற்று எட்டி யது. இதையடுத்து, அந்த அணை யில் இருந்து உபரி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது.

இடைவிடாது பெய்துவரும் மழை காரணமாக, கொச்சி விமான நிலையத்தில் ஓடுபாதையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. எனவே, பாதுகாப்பு காரணங் களுக்காக கொச்சி விமான நிலைய சேவை வரும் சனிக்கிழமை வரை ரத்து செய்யப்படுவதாக அறி விக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த விமான நிலையத்தில் இருந்து புறப்படும் - தரையிறங்கும் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு மாற்றப்பட்டுள் ளன. அதேபோல், கேரளாவில் பல மார்க்கங்களில் ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

- பிடிஐ

[X] Close