[X] Close
 

கேரள கனமழை எதிரொலி: ரத்து செய்யப்பட்ட ரயில்கள் விவரம்


kerala-rains-list-of-cancelled-diverted-trains

  • பாரதி ஆனந்த்
  • Posted: 16 Aug, 2018 09:32 am
  • அ+ அ-

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்னமும் கனமழை பெய்து வருகிறது.

திருவணந்தபுரம் ரயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட குளித்துறை - இரணியல் பகுதியிலும் மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட செங்கோட்டை - புனலூர் பகுதிகளிலும் நிலச்சரிவு காரணமாகவும் அங்கமாலி - ஆலுவா பகுதிகளுக்கு இடையே நீரின் அளவு அதிகரித்துள்ளதாகவும் அந்த மார்க்கங்களில் செல்லும் பல்வேறு ரயில்கள் இன்று (ஆகஸ்ட் 16) ரத்து செய்யப்பட்டுள்ளன. சில ரயில்கள் வேறு மார்க்கத்தில் இயக்கப்படுகின்றன.

ரத்து செய்யப்பட்ட ரயில்கள் விவரம்:

Train No. 56715 கொல்லம் - கன்னியாகுமரி பயணிகள் ரயில்  

Train No. 56718 திருநெல்வேலி - நாகர்கோயில் பயணிகள் ரயில்  

Train No. 56335/56336 செங்கோட்டை - கொல்லம் - செங்கோட்டை பயணிகள் ரயில்  

Train No. 56337/56338 புனலூர் - கொல்லம் - புனலூர் பயணிகள் ரயில்  

Train No. 56333/56334 புனலூர் - கொல்லம் - புனலூர் பயணிகள் ரயில்  

Train No. 56332/56331 கொல்லம் - புனலூர் - கொல்லம் பயணிகள் ரயில் 

Train No. 56715/56716 புனலூர் - கன்னியாகுமரி - புனலூர் பயணிகள் ரயில் 


பயண நேரம் மாற்றம்

ரயில் எண்: 19423 திருநெல்வேலி - காந்திதம் ஹம்சபர் எக்ஸ்பிரஸ் ரயில் 16.08.2018 (இன்று) திருவனந்தபுரத்திலிருந்து காலை 10.55-க்கு புறப்படுவதாக இருந்தது. ஆனால், பகல் 12.30 மணிக்கு திருவனந்தபுரத்திலிருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேறு பாதையில் செல்லும் ரயில்கள்:

Train No.16381 14.08.2018 அன்று மும்பை சிஎஸ்எம்டி ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட மும்பை - கன்னியாகுமரி ஜெயந்தி எக்ஸ்பிரஸ் ஈரோடு, திண்டுக்கல், மதுரை சந்திப்பு வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது. .

Train No 16526 பெங்களூருவில் இருந்து ஆகஸ்ட் 1 புறப்பட்ட பெங்களூரு - கன்னியாகுமரி ஐலாண்ட் ரயில் சேலம், நாமக்கல், திண்டுக்கல், திருநெல்வேலி வழியாக திருப்பிவிடப்பட்டுள்ளது.



Kalathin Vasanai - Kindle Edition


[X] Close