பெட்ரோல் வாகனங்களுக்கு நீல நிற ஸ்டிக்கர், டீசல் வாகனங்களுக்கு ஆரஞ்சு நிறம்

கோப்புப் படம்
மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் பரிந்துரையை அடுத்து ஹாலோக்ராம் வண்ண ஸ்டிக்கர்களை வாகனங்களில் பயன்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதித்துள்ளது. அந்தந்த வாகனங்களில் பயன்படுத்தப்படும் எரிவாயுவின் வகையைப் பொருத்து இந்த ஸ்டிக்கர்களின் வண்ணம் மாறும்.
பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி எரிவாயு வாகனங்களில் வெளிர் நீல நிற ஸ்டிக்கரும், டீசல் வாகனங்களில் ஆரஞ்சு நிற ஸ்டிக்கரும் பயன்படுத்தப்படும். தலைநகர் டெல்லியில் இருக்கும் வாகனங்களுக்கு இந்த நடைமுறையை செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் அமலாக்க நீதிபதிகள் அமைச்சகத்துக்கு உத்தரவிட்டுள்ளனர்.
மேலும், எலெக்ட்ரிக் மற்றும் ஹைப்ரிட் வாகனங்களில் பச்சை நிற நம்பர் ப்ளேட்டுகளை பயன்படுத்துமாறு போக்குவரத்து அமைச்சகம் சார்பாகப் பேசிய கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.என்.எஸ் நத்கார்னியை நீதிமன்றம் கேட்டுள்ளது.