[X] Close
 

நீதிபதி அறிவுரையைக் கேட்டு விவாகரத்து மனுவை திரும்பப் பெற்ற தம்பதி


when-the-cji-s-advice-reunited-a-couple

  • பாரதி ஆனந்த்
  • Posted: 13 Aug, 2018 11:47 am
  • அ+ அ-

கர்நாடக மாநிலம் ஹூபாபள்ளியில் புதிய நீதிமன்ற வளாகத்தைத் திறந்துவைக்கச் சென்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, விவாகரத்து கோரிய தம்பதிக்கு புத்தி சொல்லி அவர்களை சேர்த்து வைத்திருக்கிறார்.

ஜகதீஷ் ஷெலாகி மற்றும் பார்வதி தம்பதியினர் ஹூபாபள்ளி குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல் செய்திருந்தனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த வழக்கு சிறப்பு லோக் அதாலத் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

நேற்றைய தினம் சிறப்பு லோக் அதாலத் நீதிமன்றத்தின் நடுவராக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பொறுப்பு வகித்தார். அவர் முன் விவாகரத்து கோரியிருந்த ஜகதீஷ் தம்பதி ஆஜராகினர். அப்போது நீதிபதி மிஸ்ரா ஜகதீஷ் தம்பதிக்கு அறிவுரை கூறினார்.

குடும்ப உறவின் மகத்துவத்தை எடுத்துக் கூறியதோடு விவாகரத்து செய்வதால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்றும் விளக்கினார்.

மேலும், குடும்பம் என்ற கட்டமைப்பு பலமிழந்தால் அது சமூகத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றார்.

தலைமை நீதிபதியின் அறிவுரையை ஏற்ற தம்பதி விவகாரத்தை மனுவை திரும்பப் பெற்றனர். இதனையடுத்து தம்பதிக்கு அவர்களது குழந்தைகளுக்கும் நீதிபதி இனிப்பு வழங்கி உற்சாகப்படுத்தினார்.

[X] Close