[X] Close

மம்தாவிடம் மட்டும் தோற்றுப்போன சோம்நாத் சாட்டர்ஜி


he-only-lost-one-election-to-mamata-banerjee

  • பாரதி ஆனந்த்
  • Posted: 13 Aug, 2018 10:56 am
  • அ+ அ-

முதுபெரும் அரசியல்வாதியும் மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி  1929-ம் ஆண்டு அசாம் மாநிலம் தேஜ்பூரில் பிறந்தார். 1968-ல் அரசியலில் அடியெடுத்து வைத்தார். 1971-ல் முதன்முறையாக மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். பின்னர், 10 முறை நாடாளுமன்றத்துக்கு தேர்வு செய்யப்பட்டார்.

அவரது தேர்தல் அரசியலில் அவர் ஒரேஒருமுறை மட்டுமே தோல்வியைத் தழுவினார். 1984-ல் நடந்த மக்களவை தேர்தலில் அவர் மம்தா பானர்ஜியிடம் அவர் தோற்றுப்போனார். ஜாதவ்பூர் தொகுதியில் வென்ற மம்தா பானர்ஜி 29 வயதில் நாடாளுமன்றத்துக்குள் அடியெடுத்துவைத்து மிகச் சிறிய வயதில் நாடாளுமன்ற உறுப்பினரானவர் என்ற பெருமையைப் பெற்றார்.

சோம்நாத் சாட்டர்ஜி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதல் 5 ஆண்டு ஆட்சிகாலத்தில் (2004-2009) மக்களவை சபாநாயகராக இருந்தார். 1971-ம் ஆண்டு முதல் அவர் 10 முறை நாடாளுமன்ற கீழவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். 35 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார்.

கடந்த 2008-ம் ஆண்டில் அவர் சிபிஐ (எம்)- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கான ஆதரவை சிபிஐ (எம்) விளக்கிக் கொண்டபோதும் அவர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்ததார். சபாநாயகர் என்பவர் அரசியல் சார்புகளுக்கு அப்பாற்பட்டவர் எனக் கூறி அவர் பதவி விலக மறுத்தார். இதனையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். 2009-க்குப் பின்னர் அவர் தீவிர அரசியலில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close