[X] Close

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மறைவு


somnath-chatterjee-former-lok-sabha-speaker-passes-away-aged-89

  • பாரதி ஆனந்த்
  • Posted: 13 Aug, 2018 09:58 am
  • அ+ அ-

மக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி மறைந்தார். அவருக்கு வயது 89. அவருக்கு மனைவியும் இரண்டு மகள்களும் இருக்கின்றனர்.

முன்னதாக மாரடைப்பு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த 5 நாட்களாக அவர் செயற்கை சுவாசக் கருவியின் உதவியோடு சிகிச்சையில் இருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று (திங்கள்கிழமை) காலை கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் மறைந்தார்.

சோம்நாத் சாட்டர்ஜி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் முதல் 5 ஆண்டு ஆட்சிகாலத்தில் (2004-2009) மக்களவை சபாநாயகராக இருந்தார். 1971-ம் ஆண்டு முதல் அவர் 10 முறை நாடாளுமன்ற கீழவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

கடந்த 2008-ம் ஆண்டில் அவர் சிபிஐ (எம்)- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கான ஆதரவை சிபிஐ (எம்) விளக்கிக் கொண்டபோதும் அவர் பதவியை ராஜினாமா செய்ய மறுத்ததார். சபாநாயகர் என்பவர் அரசியல் சார்புகளுக்கு அப்பாற்பட்டவர் எனக் கூறி அவர் பதவி விலக மறுத்தார். இதனையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
 

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close