[X] Close

கட்டணமின்றிப் பாஸ்போர்ட் மாற்றி தர முடிவு: கேரள மக்களுக்குச் சுஷ்மா சுவராஜ் தகவல்


passport-damage-due-to-flood-will-be-replaced-without-cost-says-sushma-swaraj

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 12 Aug, 2018 21:12 pm
  • அ+ அ-

கேரள வெள்ளப் பாதிப்பில் பாதிப்படைந்த பாஸ்போர்ட்களைக் கட்டணமின்றி மாற்றி தர முடிவு செய்திருப்பதாக மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவித்திருக்கிறார்.

கேரளாவில் கடந்த 8-ம் தேதி முதல் யாரும் எதிர்பாராதவிதமாக மிகப் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அங்குள்ள பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. பல பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், அங்குள்ள மக்கள் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறி வருகின்றனர்.

இந்நிலையில், வெள்ளத்தால் பாஸ்போர்ட்கள் பாதிக்கப்பட்டிருந்தால் கட்டணமின்றி அவற்றை மாற்றி தர முடிவு செய்திருப்பதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “கேரளாவில் எதிர்பாராத வெள்ளம் பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. நிலைமை சீரானவுடன், வெள்ளத்தினால் பாதிப்படைந்த பாஸ்போர்ட்களை கட்டணமின்றி மாற்றித் தர முடிவு செய்துள்ளோம். தயவுசெய்து, சம்பந்தப்பட்ட பாஸ்போர்ட் அலுவலகங்களை அணுகவும்” என்று தெரிவித்திருக்கிறார் சுஷ்மா சுவராஜ்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close