[X] Close

வைரலான குழந்தை வீடியோ: வேலைக்கு அழைப்பு விடுத்த மகேந்திரா நிறுவனம்


child-video-becomes-viral-mahindra-group-asks-him-to-joins-his-company

  • கா. இசக்கிமுத்து
  • Posted: 12 Aug, 2018 18:57 pm
  • அ+ அ-

கட்டிலிலிருந்து குழந்தை கீழே இறங்கும் வீடியோ ஒன்று வைரலானதைத் தொடர்ந்து, அக்குழந்தையை வேலைக்குச் சேர்க்க அழைப்பு விடுத்திருக்கிறது மகேந்திரா நிறுவனம்.

சமூகவலைத்தளத்தில் அவ்வப்போது குழந்தைகளின் வீடியோ வைரலாவது வழக்கம். இம்முறை குழந்தை ஒன்று கட்டிலிலிருந்து கீழே இறங்குகிற வீடியோ வைரலாகி வருகிறது.

அதில், அக்குழந்தை கட்டிலிலிருந்து கீழே இறங்க முயற்சி செய்கிறது. அப்போது கீழே விழுந்துவிடுவோம் என்று நினைத்து, பாதுகாப்புக்காகக் கட்டிலிலிருந்த தலையணைகள் அனைத்தையும் இழுத்துக் கீழே போடுகிறது. அவை அனைத்துமே ஒன்றின் மீது ஒன்றாக விழுந்தவுடன், அதன் மீது கால் வைத்துக் கீழே இறங்குவதாக அந்த வீடியோ பதிவு அமைந்திருக்கிறது.

இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து மகேந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மகேந்திரா “ஆம்.. இந்தக் குழந்தை கல்லூரிப் படிப்பை முடித்ததும் நம் நிறுவனத்தில் வந்து சேர்ந்து கொள்ள அழைப்பு விடுக்கிறேன். இவர் நம் செயல்திட்டங்களை சேதாரமின்றி நடத்தி முடிப்பார்.! இவர் ஒரு ஜீனியஸ்!” என்று தெரிவித்திருக்கிறார்

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close