[X] Close
 

வார்த்தையை சிந்திய மஜத: மீண்டும் அம்பலமான கூட்டணி பூசல்!


rahul-s-hugging-act-was-childish-jds

  • பாரதி
  • Posted: 06 Aug, 2018 14:04 pm
  • அ+ அ-

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு முதல்வர் பதவியை விட்டுக்கொடுத்துவிட்டு ஆட்சியில் பங்குடன் நிற்கும் காங்கிரஸுக்கு அவ்வப்போது குட்டு விழுந்துகொண்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்னதாக கட்சி நிகழ்ச்சியில் கண்ணீர் சிந்தினார் குமாரசாமி. நான் முதல்வரானதில் தொண்டர்களும் மக்களும் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். ஆனால், நான் முதல்வராக இருந்தாலும் மகிழ்ச்சியாக இல்லை என்றார்.
அந்த நிகழ்வைத் தொடர்ந்து ஆட்டம் காணும் கூட்டணி ஆட்சி என்றெல்லாம் செய்தி வந்தவுடன், "மாநில மக்களின் பிரச்சினைக்காக நான் பகிரங்கமாக கண்ணீர் சிந்தினேன். அரசு துறைகளில் தவறுகள் மீது நடவடிக்கை எடுப்பதில் எவ்வளவு கண்டிப்புடன் இருக்கிறேனோ அதே அளவுக்கு நான் உணர்ச்சிவசப்படும் நபராகவும் இருக்கிறேன். இது என்னுள் இருக்கும் சகஜமான குணம்.

இதற்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை" எனக் கூறி சமாளித்தார்.
ஆனால், சமாளிப்புகள் நீடிக்கவில்லை. மஹத கட்சியின் மாநிலத் தலைவர் விஸ்வநாத் இன்று ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியை ராகுல் காந்தி கட்டிப்பிடித்தது சிறுபிள்ளைதனமானது என விமர்சித்திருக்கிறார். மேலும், "இதை நான் மட்டும் சொல்லவில்லை ஒட்டுமொத்த தேசமும் சொல்லியிருக்கிறது" என விமர்சித்திருக்கிறார்.

இதனால், கர்நாடகா கூட்டணிக்குள் பூகம்பம் ஏற்பட்டிருப்பது மீண்டும் அம்பலமாகியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

 
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close