[X] Close
 

இல்லத்தரசிகள்தான் இந்தியாவின் மிகப்பெரிய சிஇஓக்கள்: ஐஸ்வர்யா ராய்  


housewives-are-biggest-ceos-in-india-aishwarya

  • பாரதி
  • Posted: 04 Aug, 2018 11:02 am
  • அ+ அ-

இல்லத்தரசிகள்தான் இந்தியாவின் மிக்கப்பெரிய சிஇஓக்கள் என பாலிவுட் நடிகை ஐஸ்வர்யா ராய் பச்சன் கூறியிருக்கிறார்.

இந்தியா ஐடல் 10 என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஐஸ்வர்யாவிடன் போட்டியில் பங்கேற்றவர்களில் ஒருவரின் தாய் ஒரு கேள்வியை எழுப்பினார். இல்லத்தரசிகள் குறித்து உங்கள் கருத்து என்னவென்பதுதான் அந்தக் கேள்வி.

இல்லத்தரசிகள்தான் இந்தியாவின் மிகப்பெரிய சிஇஓ. அவர்களுக்கு உச்சபட்ச மரியாதைக்கும் பாராட்டுதலுக்கும் உரித்தானவர்கள். இந்த தேசத்திலும் உலகமெங்கிலும் இருக்கும் இல்லதரசிகளுக்கு நான் சிரம் தாழ்ந்து வணக்கம் செலுத்துகிறேன்" என்றார்.

இதற்கு பதிலளித்த நிகழ்ச்சியின் மற்றொரு நடுவர் விஷா தத்லானி, "ஐஸ்வர்யா ராய் இந்த உலகின் மிக அழகான பெண்களில் ஒருவராக இருந்தாலும் வீட்டில் அவர் எல்லா இல்லத்தரசிகள் போலவும் எளிமையாகவே இருக்கிறார். ஒருமுறை நாங்கள் உலகச் சுற்றுலா சென்றிருந்தோம். அப்போது அமிதாப் பச்சன் அவர்கள் எங்களை இரவு விருந்துக்காக அவர் தங்கியிருந்த சொகுசு விடுதிக்கு அழைத்திருந்தார். எங்கள் அனைவருக்கும் ஐஸ்வர்யா ராய் தனது கரங்களிலேயே உணவு பறிமாறினார்" எனக் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close