[X] Close
 

தானாக சேவ் ஆன ஆதார் எண் பழியை ஏற்றுக் கொண்ட கூகுள்


google-takes-the-blame-for-uidai-number-showing-up-in-people-s-phonebooks

  • பாரதி
  • Posted: 04 Aug, 2018 10:35 am
  • அ+ அ-

ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்ட மொபைல் ஃபோன்களில் ஆதார் ஆணையத்தின் உதவி எண் சேவ் ஆனதற்குக் காரணம் தாங்கள்தான் என கூகுள் நிறுவனம் விளக்கமளித்திருக்கிறது.

இதுகுறித்து கூகுள் நிறுவனம் கூறுகையில் "கடந்த 2014 -ம் ஆண்டு ஆதார் ஆணைய சேவை எண்ணும் , பேரிடர் உதவி எண்ணும் ஆண்ட்ராய்டு இயங்கு தளத்தில் கோடிங் செய்யப்பட்டு விட்டது. தற்போது வரை இது தொடர்கிறது. மேலும், வாடிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு மன்னிப்பு கோருகிறோம்.

பயனாளர்களின் ஆண்ட்ராய்டில் விதிகளை மீறி எந்த ஊடுருவலும் நடைபெறவில்லை. விரைவில் இந்த பிரச்சினை சரி செய்யப்படும்" என தெரிவித்துள்ளது. கூகுள் நிறுவனத்தின் இந்த விளக்கத்திற்கு பிறகு சேவை எண் சர்ச்சை முடிவுக்கு வந்துள்ளது.

முன்னதாக நேற்று வெள்ளிக்கிழமை காலை நாடு முழுவதும் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தும் பலரது கைபேசிகளில் டீஃபால்டாகவே 18003001947 என்ற எண் பதிவானது.

அந்த எண் அடையாள அட்டை வழங்கும் அமைப்பான யுஐடிஐஏ-வின் கட்டணம் இல்லா செல்பேசி சேவை எண் என்று பதிவானது. இதனால் பலரும் குழப்பமடைந்தனர்.

அண்மையில் ட்ராய் (தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) தலைவர் ஆர்.எஸ்.சர்மா ஆதார் எண் குறித்து விடுத்த சவாலும் அதை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எலியட் அல்டர்சன் என்பவர் உடைத்தெறிந்து சர்மாவின் அனைத்து தகவல்களையும் ட்விட்டரில் வெளியிட்டார்.

அந்த சர்ச்சை அடங்குவதற்குள் இந்தியாவில் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தும் பலரது கைபேசிகளில் டீஃபால்டாகவே 18003001947 என்ற எண் பதிவாகியிருக்கிறது. இது குறித்து ட்விட்டர்ரில் கருத்துகள் பகிரப்பட்டன. ஆதார் தகவல் பாதுகாப்புத்தன்மை குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

இந்நிலையில், யுஐடிஐஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், "18003001947 என்பது எங்களது அதிகாரபூர்வ கட்டணமில்லா மொபைல் எண் அல்ல. பொதுமக்கள் மத்தியில் குழப்பதை விளைவிக்க யாரோ இதை செய்துள்ளனர். எங்களது அதிகாரபூர்வ தொடர்பு எண் 1947. இந்த எண் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close