[X] Close
 

சர்ச்சையக் கிளப்பியுள்ள ஆதார் டோல் ஃப்ரீ எண்


uidai-helpline-number-in-phonebooks-not-ours

  • பாரதி
  • Posted: 03 Aug, 2018 16:02 pm
  • அ+ அ-

வெள்ளிக்கிழமை காலை நாடு முழுவதும் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தும் பலரது கைபேசிகளில் டீஃபால்டாகவே 18003001947 என்ற எண் பதிவானது.

அந்த எண் அடையாள அட்டை வழங்கும் அமைப்பான யுஐடிஐஏ-வின் கட்டணம் இல்லா செல்பேசி சேவை எண் என்று பதிவானது. இதனால் பலரும் குழப்பமடைந்தனர்.

அண்மையில் ட்ராய் (தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) தலைவர் ஆர்.எஸ்.சர்மா ஆதார் எண் குறித்து விடுத்த சவாலும் அதை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எலியட் அல்டர்சன் என்பவர் உடைத்தெறிந்து சர்மாவின் அனைத்து தகவல்களையும் ட்விட்டரில் வெளியிட்டார்.

அந்த சர்ச்சை அடங்குவதற்குள் இந்தியாவில் ஸ்மார்ட் ஃபோன் பயன்படுத்தும் பலரது கைபேசிகளில் டீஃபால்டாகவே 18003001947 என்ற எண் பதிவாகியிருக்கிறது. இது குறித்து ட்விட்டர்ரில் கருத்துகள் பகிரப்பட்டன. ஆதார் தகவல் பாதுகாப்புத்தன்மை குறித்து சந்தேகங்கள் எழுப்பப்பட்டன.

இந்நிலையில், யுஐடிஐஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், "18003001947 என்பது எங்களது அதிகாரபூர்வ கட்டணமில்லா மொபைல் எண் அல்ல. பொதுமக்கள் மத்தியில் குழப்பதை விளைவிக்க யாரோ இதை செய்துள்ளனர். எங்களது அதிகாரபூர்வ தொடர்பு எண் 1947. இந்த எண் கடந்த இரண்டு ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ளது" எனத் தெரிவித்துள்ளது.
இருப்பினும் தொலைதொடர்பு நிறுவனங்கள் ஏதும் இது குறித்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கவில்லை.




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close