[X] Close

முல்க் படத்துக்கு தடை விதித்த பாகிஸ்தான்: வித்தியாசமான வேண்டுகோள் விடுத்த இயக்குநர்


mulk-banned-in-pakistan-director-urges-viewers-to-watch-it-illegally

  • பாரதி ஆனந்த்
  • Posted: 03 Aug, 2018 15:19 pm
  • அ+ அ-

ரிஷி கபூர், டப்ஸி பண்ணு ஆகியோர் நடித்த முல்க் என்ற பாலிவுட் திரைப்படத்துக்கு பாகிஸ்தான் சென்சார் வாரியம் தடை விதித்துள்ளது.

இப்படத்தில் இஸ்லாமியர்கள் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி தடை விதித்துள்ளது. 
இதனையடுத்து படத்தின் இயக்குநர் அனுபவ் சிங் பாகிஸ்தான் ரசிகர்களிடம் ஒரு கோரிக்கையை முன்வைத்திருக்கிறார். "நீங்கள் படத்தைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினால் அதை சட்டவிரோதமாகவாவது பார்த்து விடுங்கள்" எனக் கூறியிருக்கிறார்.

தீவிரவாத முத்திரை குத்தப்பட்ட ஒரு முஸ்லிம் குடும்பம் தாங்கள் குற்றமற்றவர்கள் என்பதை நிரூபிக்க நடத்தும் சட்ட ரீதியான போராட்டமே இப்படத்தின் கரு.

ஆனால், இந்தப் படத்தில் இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கு தேசப்பற்று உண்டு என்பதுபோல் படத்தில் காட்சி கட்டமைக்கப்பட்டிருப்பதாலேயே பாகிஸ்தான் அரசு தடை விதித்திருக்கிறது எனக் கூறப்படுகிறது.

இதற்கிடையில் பாகிஸ்தான் அரசுக்கு அனுபவ் சின்ஹா எழுதியுள்ள கடிதத்தில், "பாகிஸ்தான் வாழ் அன்பு மக்களே. இணக்கமாக வாழ்தலைப் பற்றிய ஒரு திரைப்படத்தை ஏன் உங்கள் அரசாங்கம் உங்களிடம் சேர்க்கவிடாமல் தடை செய்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. எப்படியும் இந்தட்ப் படம் உங்கள் கைகளை வந்தடையத்தான் போகிறது. அப்போது தயைகூர்ந்து அப்படத்தைப் பாருங்கள். சட்டபூர்வமாக நீங்கள் இப்படத்தைப் பார்க்க வேண்டும் என நான் விரும்பினேன்.

ஆனால், இப்போது சொல்கிறேன் சட்டவிரோதமாகவாவது இப்படத்தைப் பார்த்துவிடுங்கள். ஒரு படத்தின் ட்ரெய்லரைப் பார்த்தே எப்படி முன்முடிவுக்கு வருகிறார்கள் என்பது எனக்குப் புரியவில்லை. இந்தியாவில் உள்ளவர்கள் இப்படம் முஸ்லிம் ஆதரவுப் படம் என்கின்றனர். உங்கள் தேசத்தில் இந்துக்கள் சிறுபான்மையினராக உள்ளனர்.

இங்கே இந்தியாவில் முஸ்லிம்கள் சிறுபான்மையினராக உள்ளனர். இந்த சூழலில் இருவரும் அமைதியும் சமாதானமும் பொங்க எப்படி இணக்கமாக வாழ வேண்டும் என்பதையே நான் இப்படத்தில் பேசியிருக்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close