[X] Close

செலவு குறைப்பு நடவடிக்கைகளில் இறங்கும் ஜெட் ஏர்வேஸ்


cost-cutting-measures-by-jet-airways

கோப்புப் படம்

  • kamadenu
  • Posted: 03 Aug, 2018 11:31 am
  • அ+ அ-

விமான போக்குவரத்து நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், தனது ஊழியர்கள் மற்றும் பங்குதாரர்களுடன், செலவு குறைப்பு நடவடிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவித்துள்ளது. ஊதிய குறைப்பு குறித்தும் பேசப்படும் என்று தெரிகிறது.

ஆரோக்கியமான, நிலையான வணிக சூழலை உருவாக்க விமான ஓட்டிகள் உள்ளிட்ட தனது ஊழியர்களுடன் இந்த பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ளதாகவும், நிலைத்திருக்கக்கூடிய, வளர்ச்சியை ஒட்டிய எதிர்காலத்தை உருவாக்குவதே தங்களது எண்ணம் என்றும்  அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. 

இது குறித்த அறிக்கையில் "தேவைப்படும் வணிக செயல்திறன்களுக்காக வருமானத்தை அதிகரிக்கும் பொருட்டும், செலவுகளைக் குறைக்கும் பொருட்டும் ஜெட் ஏர்வேஸ், சில நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. இதில் விற்பனை, விநியோகம், ஊதியம் மற்றும் பரமாரிப்பு உள்ளிட்ட செலவுகளும் அடங்கும்.

வணிகத்தின் அனைத்து நிலைகளிலும் தேவைப்படும் சேமிப்புகளை செய்ய,  சம்பந்தப்பட்டவர்களின் முழு ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்க, ஜெட் ஏர்வேஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

- ஐஏஎன்எஸ்

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close