[X] Close

மும்பை புறநகர் ரயிலில் பச்சைப் பாம்பு: பீதியடைந்த பயணிகள்


panic-on-mumbai-local-train-after-snake-found-inside-coach

  • பாரதி ஆனந்த்
  • Posted: 02 Aug, 2018 16:26 pm
  • அ+ அ-

மும்பை புறநகர் ரயில் ஒன்றில் பச்சைப் பாம்பு இருந்ததைப் பார்த்து பயணிகள் பீதியடைந்தனர்.

மும்பை திட்டாவாலாவில் இருந்து சத்திரபதி சிவாஜி ரயில் முனையத்துக்கு இன்று காலை 8.33 அளவில் சென்ற புறநகர் ரயிலில் பச்சைப் பாம்பு ஒன்று இருந்தது. ரயிலில் இருந்த மின்விசிறியில் சுற்றியபடி இந்த பாம்பு நெளிந்து கொண்டிருந்தது. திடீரென பாம்பை கவனித்த பயணிகள் பீதியடைந்தனர். ஒருசிலர் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினர். 

தானே ரயில் நிலையத்தில் ரயில் நின்றது. சிறிது நேரத்தில் பயணிகளே அந்தப் பாம்பை ரயிலுக்கு வெளியில் வீசினர். ரயிலுக்குள் பாம்பு இருந்த புகைப்படமும் வீடியோவும் இணையத்தில் வைரலானது.

பச்சைப் பாம்புகள் லேசான விஷத் தன்மை கொண்டது என்றும் சிறிய பூச்சிகள் தவளைகளை உண்டு வசிப்பவை என்றும் கூறப்படுகிறது.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close