[X] Close
 

கேரள முதல்வருக்கு காரோட்டிய பெண் போலீஸ்!


meet-saseendra-first-woman-in-kerala-to-drive-cm-s-vehicle

  • பாரதி
  • Posted: 02 Aug, 2018 16:16 pm
  • அ+ அ-

கேரள மாநிலத்தில் முதல் முறையாக பெண் காவலர் ஒருவர் முதல்வருக்கு கார் ஓட்டிய சம்பவம் நடந்திருக்கிறது. கேரளாவைச் சேர்ந்தவர் சசீந்திரா (49). இவர் திரிச்சூர் மாவட்ட கமிஷனர் அலுவலகத்தில் காவலராக உள்ளார். காவல்துறையில் 14 வருடங்கள் அனுபவமிக்கவர். 

கார் ஓட்டுவதில் திறன் படைத்த இவர் பெண்கள் பாதுகாப்புக்கான வுமன்ஸ் ஹெல்ப்லைன் குழுவுக்கு பல ஆண்டுகள் வாகனம் ஓட்டியிருக்கிறார். பேருந்து, டிரக் என கனரக வாகனங்களையும் மிக எளிமையாக இயக்கக் கூடியவர்.
இவருக்கு அண்மையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் செல்லும் காரை ஓட்டும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. கேரள மாநில முதல்வரின் காரை ஓட்டும் வாய்ப்பைப் பெற்ற முதல் பெண்மணி இவர்தான்.

திரிச்சூரில் உள்ள ராமவர்மபுறம் காவல் அகாடமியில் நடந்த பாஸிங் அவுட் பரேடில் பினராயி விஜயன் கலந்து கொண்டார். அவர் சென்ற வாகனத்தை இயக்கும் வாய்ப்பு சசீந்திராவுக்குக் கிடைத்தது.

இது குறித்து சுசீந்திரா, "இந்த வாய்ப்பு என் வாழ்க்கையின் மிக உன்னதமான தருணம். முதல்வரின் வாகனத்தை இயக்குவது என்பது மிகப் பெரிய பொறுப்பு. சிறிய தவறுகூட நடந்துவிடக் கூடாது. அதற்காக முதலில் நான் மனதளவில் தயாரானேன். பின்னர் தினமும் காலை மாலை இரண்டு வேளையும் இருமுறை கார் ஓட்டி பயிற்சி மேற்கொண்டேன். மூன்று வாரங்கள் இதே போல் பயிற்சி செய்தேன்.

இதுபோன்ற பரேடுகள் நடக்கும்போது விஐபி.,க்கள் செல்லும் வாகனத்தை இயக்கும் வாய்ப்பு எப்போதுமே ஏன் ஆண்களுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது என நான் யோசித்திருக்கிறேன். ஆனால், இப்போது அந்த நிலை மாறியிருக்கிறது. எனது மகிழ்ச்சி சிலருக்கு அற்பமானதாகக்கூடப் படலாம் ஆனால் என்னைப் பொருத்தவரை இது மிகப்பெரிய வாய்ப்பு" என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.

சசீந்திராவுக்கு இது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் சம்பவம். காரணம், திரிச்சூரில் நடந்த பாஸிங் அவுட் பரேடில் முதன்முறையாக பெண் காவலர்கள் அடங்கிய பட்டாலியனும் இடம்பெற்றிருந்தது.




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close