[X] Close

102 வயது முதியவர் பக்கவாதத்திலிருந்து மீண்ட அதிசயம்!


bengaluru-man-102-survives-stroke

  • பாரதி ஆனந்த்
  • Posted: 02 Aug, 2018 15:43 pm
  • அ+ அ-

பெங்களூருவில் 102 வயது முதியவர் ஒருவர் சரியான நேரத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டதால் பக்கவாதத்திலிருந்து மீண்டு இயல்பு நிலைக்குத் திரும்பியிருக்கிறார்.

பெங்களூருவைச் சேர்ந்தவர் ராமசாமி. இவருக்கு வயது 102. சமீபத்தில் இவருக்கு இடது கை மற்றும் கால் செயலிழந்தது. மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அவருக்கு ஸ்ட்ரோக் எனும் பக்கவாதம் ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.

ஸ்ட்ரோக்கை உறுதிப்படுத்திய மருத்துவர்கள் ராமசாமியின் குடும்பத்தினர் சம்மதத்துடன் அவருக்கு த்ராம்போலைஸிஸ் எனும் சிகிச்சையை அளிக்க முன்வந்தனர். அந்த சிகிச்சையானது ரத்த நாளங்களில் ஏற்பட்டிருக்கும் அடைப்பை சீர் செய்யக்கூடியது. ஆனால், அதிக வீரியம் கொண்ட இந்த மருந்து சில நேரங்களில் மூளையில் ரத்தக்கசிவையும் ஏற்படுத்தக்கூடியது. ஆனால், ராமசாமியின் தேகம் இந்த சிகிச்சையை ஏற்றுக்கொண்டது. 

ஸ்ட்ரோக் ஏற்பட்டு காப்பாற்றவர்களில் ராமசாமிதான் அதிக வயது கொண்டார் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து ராமசாமிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், "ஸ்ட்ரோக் ஏற்பட்ட முதல் 4.5 மணி நேரம் கோல்டன் ஹவர் என்று மருத்துவத்தில் அழைக்கப்படுகிறது. இந்த நேரத்துக்குள் நோயாளிக்கு சரியான சிகிச்சையை அளித்துவிட்டால் அவருக்கு கடுமையான வாதம் ஏற்பட்டு நிரந்தரமாக முடங்கும் சூழலைத் தவிர்க்கலாம். அதேபோல் பக்கவாதத்தால் ஏற்படும் உயிரிழப்பையும் தவிர்க்கலாம்" என்றார்.

உலக சுகாதார நிறுவனமானது, ஸ்ட்ரோக் என்ற பக்கவாத நோயால்தான் இந்தியாவில் அதிக அளவில் மரணம் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளது. இந்தியாவில் இறப்பை ஏற்படுத்தும் நோய்களில் ஸ்ட்ரோக் இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close