[X] Close

ட்விட்டரில் மன்னிப்பு கோரிய மேனகா காந்தி


maneka-gandhi-apologises-after-calling-transgenders-other-ones

  • பாரதி ஆனந்த்
  • Posted: 31 Jul, 2018 10:23 am
  • அ+ அ-

மூன்றாம் பாலினத்தவரை அவமதித்ததாக எழுந்த குற்றச்சாட்டில் மத்திய அமைச்சர் மேனகா காந்தி பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளார். ஆனால் அதேவேளையில் அவையில் மூன்றாம் பாலினத்தவர் பற்றி பேசும்போது தான் நகைக்கவில்லை என்று கூறியுள்ளார்.

ஆள் கடத்தலை தடுப்பது தொடர்பான தகவல்களை பள்ளி பாடநூல்களில் சேர்ப்பது குறித்து மக்களவையில் பேசிய மேனகா காந்தி மூன்றாம் பாலினத்தவரைப் பற்றி பேசும்போது 'அவைகள்' என்று பொருள்படும் வகையில் ஆங்கிலத்தில் அவர்களைச் சுட்டிக் காட்டினார்.

இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்தது. குறிப்பாக தேசிய மக்கள் இயக்கத்தின் உறுப்பினரும் மூன்றாம் பாலினத்தவருமான மீரா சங்கமித்ரா மேனகாவைக் கடுமையாக விமர்சித்தார். மேனகாவும் அவரது பேச்சைக் கேட்டு மேசையைத் தட்டிச் சிரித்த எம்.பி.க்களும் மன்னிப்பு கோர வேண்டும் என்றார்.

இந்நிலையில், மேனகா காந்தி தனது ட்வீட்டில் "மூன்றாம் பாலினத்தவரைக் குறிக்க நான் பயன்படுத்திய வார்த்தைப் பிரயோகத்துக்காக நான் வருந்துகிறேன். ஆனால் அதேவேளையில் அவையில் மூன்றாம் பாலினத்தவர் பற்றி பேசும்போது நான் நகைக்கவில்லை. எனது அறிவு விசாலமின்மைக்கு நான் வருந்துகிறேன். மூன்றாம் பாலினத்தவரை குறிக்கப் பயன்படுத்தப்படும் அலுவல் பதம் எனக்குத் தெரியாமல் இருந்ததே இதற்குக் காரணம். இனி எப்போதும் மூன்றாம் பாலினத்தவரை டிஜி (TG) டிரான்ஸ்ஜெண்டர் என்றே குறிப்பிடுவேன் என்றார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close