[X] Close

பெண் பிறப்புறுப்பு சிதைப்பு பழக்கம்: உச்ச நீதிமன்றம் விளாசல்


women-do-not-live-only-for-a-marriage-and-husband

  • பாரதி ஆனந்த்
  • Posted: 30 Jul, 2018 18:16 pm
  • அ+ அ-

பெண் பிறப்புறுப்பை சிதைத்து அதன்மூலம் அவர்கள் திருமணத்தைத் தாண்டிய உறவை மேற்கொள்ளாதவாறு புனிதம் பேணுவதாகக் கூறும் முஸ்லிம்களின் ஒரு பிரிவு மக்களின் பழக்கவழக்கத்தை உச்ச நீதிமன்றம் மிகக் கடுமையாக சாடியிருக்கிறது.

இந்த வழக்கில் முஸ்லிம் சமூகத்தினர் சார்பில் அபிஷே மனு சிங்வி ஆஜரானார். அவர் வாதாடும்போது தாவூதி போரா சமூகத்தினர் பின்பற்றிவரும் இந்தப் பழக்கம் மத உணர்வு சார்ந்தது. இது குறித்து பரிசீலிக்க உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வுக்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும் என்று கோரினார்.

அதேவேளையில் அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல், கே.கே.வேணுகோபால் "இந்த நடைமுறை பெண் குழந்தைகளுக்கு மீள முடியாத துயரத்தை ஏற்படுத்திவிடுகிறது. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா 27 ஆப்பிரிக்க நகரங்களில் இந்த பழக்கவழக்கம் தடை செய்யப்பட்டிருக்கிறது. எனவே இந்தியாவிலும் பெண் பிறப்புறுப்பு சிதைப்பு பழக்கத்துக்கு தடை விதிக்க வேண்டும்" என்றார்.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், "ஒரு பெண் அவளது வாழ்க்கையை திருமணத்துக்காகவும் கணவருக்காகவும் மட்டும் வாழ வேண்டிய அவசியமில்லை. அவர்கள் உடலை சிதைப்பது அனுமதிக்க முடியாதது. அரசியல் சாசனம் வழங்கியுள்ள தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது" என்றார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close