[X] Close

ட்விட்டரில் ட்ரெண்டான #JusticeForGoat 


twitterers-angry-after-alleged-gang-rape-of-a-pregnant-goat

  • பாரதி ஆனந்த்
  • Posted: 30 Jul, 2018 13:55 pm
  • அ+ அ-

கர்ப்பிணி ஆடு ஒன்று பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட விவகாரத்தில் ட்விட்டராட்டிகள் வெகுண்டெழுந்துள்ளனர். ஹரியாணா மாநிலம் நூ மாவட்டத்தில் உள்ள மேவாத் எனும் ஊரில் கர்ப்பிணி ஆடு ஒன்று 8 ஆண்களால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறது. இதனால் அந்த ஆடு உயிரிழந்தது.

இது குறித்து, நாகினா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 8 பேரில் 3 பேரை போலீஸார் பிடித்துள்ளனர். இவர்கள் அனைவரும் போதைக்கு அடிமையானவர்கள் எனத் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், ட்விட்டரில் #JusticeForGoat என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகத் தொடங்கியது. இந்த ஹேஷ்டேக் கீழ் பலரும் காட்டமாகப் பதிவுகளைப் பகிர்ந்தனர். 

''இங்கு விலங்குகளுக்குக்கூட பாதுகாப்பு இல்லையா?"
"பாலிவுட் திரையுலகில் இது குறித்து ஒரு படம் தயாரிக்க வேண்டும். அதில் அந்த 8 கொடூரக்காரர்களின் உண்மையான பெயரையே பாத்திரங்களுக்கு சூட்ட வேண்டும்"
"மனித வடிவில் இருக்கும் எல்லோருமே மனிதரல்ல" என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

இவ்வாறாகக் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

பீட்டா இந்தியா அமைப்பின் அவசர கால ஒருங்கிணைப்பாளர் அஷார் கூறும்போது, "வன்முறை வெறியர்களாக மாறும் மனிதர்கள் முதலில் தங்கள் வன்மத்தை விலங்குகளிடம்தான் கட்டவிழ்ப்பார்கள். அப்புறம்தான் அதை சகமனிதர்களிடம் நிகழ்த்தத் துணிவார்கள். மேவாத் சம்பவம் நமக்கு ஓர் எச்சரிக்கை மணி" எனக் கூறியுள்ளார்.

- ஏஎன்ஐ

போட்டோ கேலரி

Hindu Tamil Thisai - Kindle Edition


[X] Close