[X] Close
 

சவால் விடுத்த ட்ராய் தலைவர் வங்கிக் கணக்கில் ரூ.1 வரவு வைத்த ஹேக்கர்கள்!


threw-challenge-as-an-ordinary-citizen

  • பாரதி
  • Posted: 30 Jul, 2018 11:26 am
  • அ+ அ-

ஆதார் தகவல் பாதுகாப்பானது எனக் கூறி வந்த, தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (ட்ராய்) தலைவர் ஆர்.எஸ்.சர்மாவின் வங்கிக் கணக்கில் ரூ.1 வரவு வைத்து அதிர்ச்சியை ஹேக்கர்கள் ஏற்படுத்தியிருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளது.

ட்ராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மாவுக்கு மர்ம நபர் ஒருவர் ட்விட்டரில் சவால் விடுத்தார். இதனையடுத்து சர்மாவும் தனது ஆதார் எண்ணை வெளியிட்டார். கூடவே, இந்த எண்ணை வைத்து ஏதாவது தீங்கு இளைக்க முடியுமா என்பதற்கு ஓர் உதாரணம் செய்து காட்டவும் என்றும் சவால் விடுத்திருந்தார்.

இதனையடுத்து, வெகு சில நிமிடங்களிலேயே சர்மாவின் ஆதார் எண் குறித்த முழு விவரங்களையும் ட்விட்டரில் ஒருவர் பதிவிட்டார். சர்மாவின் பிறந்தநாள் விவரம், தொலைபேசி எண், மாற்று தொலைபேசி எண், வாக்காளர் அடையாள அட்டை, பான் எண்,  வாட்ஸ் அப் புரொஃபைல் பிக்சர் ஆகியனவற்றை ஒருவர் வெளியிட்டார்.

"இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். இப்போது புரிகிறதா ஆதார் எண்ணை பொதுவெளியில் தெரிவிப்பது ஏன் சரியான முடிவு அல்ல" என்றும் எலியட் தனது ட்வீட்டில் குறிப்பிட்டிருந்தார்.

அப்போதும்கூட அசராத சர்மா, இந்தத் தகவல்கள் பொதுவெளியில் இருப்பதால் எந்த தவறும் இல்லை என்றார்.  

எலியட்,  பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எலியட் ஆல்டென்சர் என்பது அவரது புரொபைலில் இருந்து தெரியவந்துள்ளது.
இதைவிட, ட்ராய் தலைவர் வங்கிக் கணக்கில் ஹேக்கர்கள் ரூ.1 டெபாசிட் செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

சர்மா விளக்கம்..
ட்விட்டரில் ஆதார் எண்ணை வெளியிட்ட ட்ராய் தலைவர் ஆர்.எஸ்.சர்மாவை பலரும் ஆதரித்திருந்தாலும் சிலர் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர்.
இதனையொட்டி சர்மா தனது ட்விட்டரில், "நான் சவால் விடுத்தது ஒரு சாதாரண இந்தியப் பிரஜை என்ற முறையிலேயே தவிர ட்ராய் தலைவர் என்ற அதிகாரத்தில் அல்ல" எனக் கூறியுள்ளார்.




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close