[X] Close
 

இந்துக்கள் ஆட்டிறைச்சியை ஏன் சாப்பிடக்கூடாது?- பாஜக தலைவரின் சர்ச்சை விளக்கம்


hindus-should-not-eat-goats-meat-bengal-bjp-leader-explains-his-tweet

  • பாரதி
  • Posted: 28 Jul, 2018 17:20 pm
  • அ+ அ-

மேற்குவங்க மாநில பாஜக துணைத் தலைவர் சந்திர குமார் போஸ் இந்துக்கள் ஆட்டிறைச்சி உண்ணக் கூடாது என்றும் அதற்கு காந்தியை மேற்கோள் காட்டியதும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

ஏற்கெனவே, மாட்டிறைச்சி வைத்திருந்ததாக உண்டதாக ஆங்காங்கே கும்பல் வன்முறைகளுக்கு உயிரிப்பலி நேர்ந்துவரும் நிலையில் தற்போது ஆட்டிறைச்சியையும் சர்ச்சை உணவாக்கும் வகையில் பேசியிருக்கிறார் சந்திர குமார் போஸ்.

சர்ச்சைக்குரிய ட்வீட்..
சந்திரகுமார் போஸ் தனது ட்வீட்டில், "காந்திஜி எனது தாத்தா சரத் சந்திர போஸ் இல்லத்தில் தங்கியிருக்கிறார். அப்போது அவர் ஆட்டுப்பால் கேட்டார். அதற்காக வீட்டிற்கு இரண்டு ஆடுகள் கொண்டு வரப்பட்டன. இந்துக்களின் பாதுகாவலரான காந்திஜி ஆடுகளை தனது தாயாக பாவித்து அதன் பாலை பருகினார். இந்துக்களே ஆட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்" எனப் பதிவிட்டிருந்தார். அவரது இந்தக் கருத்து சர்ச்சையானது.

இதற்கு திரிபுரா மாநில ஆளுநர் தத்தாகட்டா ராய் பதிலளித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "காந்தியோ அல்லது உங்கள்து தாத்தாவோ ஆடுகளை தாயாக பாவிக்கவில்லை. அது உங்களது முடிவு. காந்தி எப்போதுமே தன்னை இந்துக்களின் பாதுகாவலர் என அடையாளம் காட்டிக் கொண்டதும் இல்லை. இந்துக்களாகிய நாங்கள் பசுக்களையே மாதாவாகக் கருதுகிறோம், ஆடுகளை அல்ல. இத்தகைய குப்பைகளை வியாபாரம் செய்ய வேண்டாம்" எனக் காட்டமாகப் பதிவிட்டார்.

இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டியளித்த சந்திர குமார் போஸ், "எனது கருத்தின் உள்நோக்கம் சரியாகப் புரிந்துகொள்ளப்படவில்லை. நீங்கள் மாட்டிறைச்சி உண்பவர்களை அடித்தீர்கள் என்றால் ஆட்டிறைச்சி சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள். ஏனெனில் மகாத்மா காந்தி ஆட்டுப்பால் குடித்தார். ஆட்டுப்பால் குடித்தால் ஆட்டை அன்னையாக மதிப்பதாகவே அர்த்தம். அரசியலில் மதச்சார்பு வேண்டாம் என்ற தொனியில்தான் நான் பேசினேன்" எனக் கூறியுள்ளார்.
 




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close