[X] Close

ஆதித்யநாத்திடம் ஆசிர்வாதம்! சர்ச்சையில் சிக்கிய அதிகாரி


feeling-blessed-cop-kneels-folds-hands-before-yogi-adityanath

  • பாரதி ஆனந்த்
  • Posted: 28 Jul, 2018 15:03 pm
  • அ+ அ-

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் ஆசிர்வாதம் பெற்றதால் சர்ச்சையில் சிக்கியுள்ளார் போலீஸ் அதிகாரி ஒருவர்.

கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் கோரக்பூர் நகரில் முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் ஆசி பெற்ற பிரவீன் குமார் சிங் என்ற அதிகாரி அந்தப் புகைப்படங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

பிரவீன் குமார் சிங், கோரக்பூரில் சர்க்கிள் ஆஃபீஸராக உள்ளார். உயர் பதவியில் இருக்கும் அவர் காவலர் சீருடையில் ஆசிர்வாதம் வாங்குவதும் முதல்வருக்கு மாலையிடுவதாகவும் வெளியான புகைப்படங்கள் சர்ச்சையைக் கிளப்பியுள்ளன.

இது குறித்து எதிர்ப்புகள் அதிகரிக்கவே, பிரவீன் குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் யோகி ஆதித்யநாத்திடம் முதல்வர் என்ற முறையில் ஆசி பெறவில்லை அவர் கோரக்நாத் கோயிலின் தலைவர் என்பதால் குரு பூர்ணிமாவை ஒட்டி அவரிடம் ஆசி பெற்றேன் என்று விளக்கமளித்திருக்கிறார்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close