[X] Close
 

சந்திர கிரகண மூடநம்பிக்கை: ஊரைவிட்டு வெளியேறிய மக்கள்


blind-belief-makes-tribals-flee-hamlet-in-chikkamagaluru

  • பாரதி
  • Posted: 28 Jul, 2018 11:27 am
  • அ+ அ-

பூரண சந்திர கிரகணத்தால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்ற மூட நம்பிக்கையால் கர்நாடகா மாநிலம் சிக்மகலூர் மாவட்டத்தில் உள்ள ஹவுகோலா கிராமத்தில் உள்ள பழங்குடி குடும்பங்கள் ஊரைக் காலி செய்தனர். தங்கள் காவல் தெய்வங்கள் வாக்கின்படி ஊரைவிட்டு வெளியேறுவதாக அவர்கள் தெரிவித்தனர்.

அந்த ஊரில் மொத்தம் 25 குடும்பங்களே வசித்த நிலையில் கணேஷ் (24), சுரேஷ் (26) ஆகிய இரண்டு இளைஞர்கள் ஜூலை 7, ஜூலை 21 தேதிகளில் முறையே மரணமடைந்தனர். இந்த மரணம் அவர்களுக்குள் பயத்தை ஏற்படுத்தியது. எந்தவித உடல்நல பாதிப்பும் இல்லாத அந்த இளைஞர்களின் திடீர் மரணம் ஊர்க்காரர்களை அச்சமடையச் செய்தது.
இதனையடுத்து பழங்குடியினப் பெரியவர்கள் சிலர் திடீர் மரணம் குறித்து காரணம் அறியச் சென்றனர். அப்போது அவர்கள் குல தெய்வங்களான சவுடம்மா, மர்ரம்மாவை வணங்கி குறி கேட்டுள்ளனர்.

குறி சொல்லிய பூசாரியோ ஹவுகோலாவில் யாரும் இர்ய்க்க வேண்டாம். மீறி இருந்தால் பூரண சந்திர கிரகணத்தன்று மேலும் பல உயிர்கள் பறிபோகும் எனக் குறி கூறியிருக்கிறார்.

இதனையடுத்து அவர்கள் அனைவரும் ஊரைக் காலி செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர். கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஊர்க்காரர்களை சமரசம் செய்ய முயன்றும் யாரும் எதுவும் கேட்பதாக இல்லை. 
என்.ஆர்.புரா பகுதி தாசில்தார் கோபிநாத் கூறும்போது, "ஊரிலிருந்து வெளியேறிய ஊர்க்காரர்களுடன் தொடர்பில் இருக்கிறோம். அவர்களை சமாதானப் படுத்தி மீண்டும் ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

ஹவுகோலா இனத்தினர் பாம்பு பிடிப்பதில் தேர்ந்தவர்கள். இப்போது அவர்கள் இளம் தலைமுறையினர் விவசாயம் செய்து வருகின்றனர். அவர்களுக்கு நிலம், வீடு கிடைப்பதற்கு அரசாங்க உதவி பெற்றுத்தந்தோம். ஆனால், அவர்கள் மூட நம்பிக்கையால் வெளியேறி இருக்கின்றனர். அவர்களை எப்படியும் நிச்சயமாக மீண்டும் ஊருக்கு அழைத்து வருவோம்" என்றார்.




Kalathin Vasanai - Kindle Edition


m7

d7

[X] Close