[X] Close

ட்விட்டரில் ட்ரெண்டாகும் #HardikPatel


hardik-sentenced-2-years-imprisonment

  • பாரதி ஆனந்த்
  • Posted: 25 Jul, 2018 14:27 pm
  • அ+ அ-

மகாராஷ்டிராவில் இன்று மராத்தா சமூகத்தினர் தங்களுக்கு ஓபிசி அந்தஸ்து கோரி போராடுவதுபோல் தான் குஜராத்தில் படேல் சமூகத்தினருக்கு ஓபிசி அந்தஸ்து கோரி போராடினார் ஹர்திக் படேல். ஆனால், அவரது தலைமைக்குத் திரண்ட கூட்டம் வெளிநாட்டு ஊடகங்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில் 2015-ல் நடந்த போராட்டத்தில் வன்முறையை தூண்டிவிட்டதாக ஹர்திக் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் குஜராத் உள்ளூர் நீதிமன்றம் ஒன்று அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.50,000 அபராதமும் விதித்துள்ளது.

ஹர்திக் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பேசும்போது, "படேல் சமூகத்தை ஓபிசி பிரிவில் சேர்ப்பதற்கான போராட்டத்தை முன்னெடுக்கும்போது நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு தற்கொலை செய்து கொள்ளாதீர்கள். போலீஸ்காரர்களை வேண்டுமானால் கொலை செய்யுங்கள்" எனக் கூறியிருந்தார்.

இதற்காக அவர் வன்முறையைத் தூண்டும் விதமாக பேசிய குற்றச்சாட்டின் கீழ் கைதும் செய்யப்பட்டார். அவர் கைதைக் கண்டித்து பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்றன. பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் அவருக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.50,000 அபராதமும் விதித்து உள்ளூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இதனையடுத்து #HardikPatel இந்திய அளவில் மூன்றாவது இடத்தில் ட்ரெண்டாகிவருகிறது. ஹர்திக் படேலுக்கு ஆதரவாகப் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close