[X] Close

அமுல் விளம்பரத்தைக் கொண்டாடும் நெட்டிசன்கள்


amuls-take-on-whatsapp-forward-limits-to-curb-rumour-mongering-gets-twitter-talking

  • பாரதி ஆனந்த்
  • Posted: 24 Jul, 2018 17:11 pm
  • அ+ அ-

அன்றாடம் சமூக அரசியல் நிகழ்வுகளைச் சார்ந்து ஒரு கார்ட்டூனை வெளியிட்டு விளம்பர உலகில் தனக்கு நிகரே இல்லாத யுத்தியை கைவசம் வைத்திருக்கிறது அமுல் பட்டர் நிறுவனம்.

அண்மையில், நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி பிரதமர் மோடியைக் கட்டியணைத்ததும், தன் கட்சியினரைப் பார்த்து கண் சிமிட்டியதும் செய்தியானது.

ஆனால் அதைக் கொண்டு அழகான கார்ட்டூன் தீட்டியது அமுல். ராகுல் காந்தி, மோடியின் முகபாவனைகள் ஒரு முழு செய்திக்கட்டுரைக்கான கருத்தைக் கொண்டிருந்தது. அதேபோல், அமுல் பதிவிடும் கேப்சன்களும் சற்றும் சளைத்தவை அல்ல. ராகுல் மோடி கட்டிப்பிடி சம்பவத்துக்கு அமுல் ஹக்ஸ் பிரெட் டெய்லி.. தினமும் அமுல் பட்டர் பிரெட்டை கட்டிக்கொள்கிறது என தலைப்பிட்டிருந்தது. 

அந்த கார்ட்டூனைக் கொண்டாடிய நெட்டிசன்கள் இன்று வெளியான வாட்ஸ் அப் கார்ட்டூனைக் கொண்டாடத் தொடங்கியிருக்கின்றனர். வதந்திகள் பரவுவதைத் தடுக்க ஒரே நேரத்தில் 5 குறுந்தகவல்களை மட்டுமே அனுப்ப முடியும் என்ற வாட்ஸ் அப் கெடுபிடியைக் குறிப்பிட்டு "Whatsappenning to forwards" என்ற தலைப்பில் கார்ட்டூன் வெளியாகியுள்ளது.
இந்த கார்ட்டூனையும் நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.

போட்டோ கேலரி

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close