[X] Close

ரூ.12 கோடி வருமான வரி செலுத்திய தோனி


ms-dhoni-pays-income-tax-payer-of-rs-12-17-crore

  • பாரதி ஆனந்த்
  • Posted: 24 Jul, 2018 15:49 pm
  • அ+ அ-

ஜார்க்கண்ட் மாநிலத்தில் அதிகம் வரி செலுத்தியவர் இந்திய கிரிக்கெட் அணி வீரர் மகேந்திர சிங் தோனி. 2017- 18-ம் ஆண்டுக்கு அவர் ரூ.12.17 கோடி வரி செலுத்தியிருக்கிறார்.

இது குறித்து வரி ஆணையர் மகாலிங்கம், "2016-17 நிதியாண்டில் தோனி ரூ.10.93 கோடி வரி செலுத்தினார். ஆனால், அப்போது அவர் அதிகம் வரி செலுத்தியவராக இல்லை. ஆனால், தற்போது அவரே மாநிலத்தில் அதிக வரி செலுத்தியவராக இருக்கிறார்" என்றார்.

இதேபோல் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஐடி பெண் ஊழியர் ஒருவர் தெலங்கானா மற்றும் ஆந்திரா பிராந்தியத்தில் அதிக வரி செலுத்தியவராக இருக்கிறார். அவரது பெயர் அடையாளம் வெளியாகவில்லை. ஆனால் அவரது ஆண்டு வருமானம் ரூ.9 கோடி. அதில் 30% அவர் வரியாக செலுத்தியிருக்கிறார்.

Therkil Irunthu Oru Suriyan - Kindle Edition


[X] Close